கோவை மாநகராட்சியில் துப்புரவு தூய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள் உள்ளதா?
கோவை மாவட்டம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மாநகராட்சி சார்பாக துப்புரவு பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் 100 வார்டுகளிலும் தங்களது பணியை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு கோவை மாநகராட்சி சரியான உபகரணங்களை வழங்கி உள்ளதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது ?
கோவை மாநகரப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடைகள் தோண்டப்பட்டு தூர்வாரப்படாமல் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் மிகவும் அதிருப்தியில் இருக்கின்றனர்.தற்போது கோவை மாநகரப் பேருந்து நிலையம் முன்பு பாதாள சாக்கடை தோண்டப்பட்டு ஐந்துக்கும் மேற்பட்ட துப்புரவு தூய்மை பணியாளர்கள் பாதாள சாக்கடையில் அடைந்துள்ள மண் மற்றும் குப்பைகளை சுத்தம் செய்து வருகின்றனர்.
இவர்களுக்கு சரியான உபகரணங்கள் கொடுக்கப்படாததால் தங்களது கைகளிலே பாதாள சாக்கடையை சுத்தம் படுத்தும் பணி அப்பகுதியில் உள்ள பொதுமக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.
பாதாள சாக்கடைக்குள் இறங்கி உள்ளே இருக்கக்கூடிய மண் குப்பைகளை எந்தவிதமான உபகரணங்களும் இல்லாமல் வயதான முதியோர்கள் கையால் அள்ளி வெளியே கொட்டி வருவது பார்ப்பவர்களை மிகவும் வேதனை அடையச் செய்துள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொள்ள முயன்ற போது அழைப்பை எடுக்காமல் துண்டித்து வருவது மாநகராட்சி உடைய மெத்தன போக்கை வெளிப்படுத்துகிறது.
இதுபோன்ற நிலைகள் தொடர்ந்துக்கொண்டே இருப்பதால் மக்கள் அதிகாரிகளை விட்டுவிட்டு அரசை குற்றம் சாட்டிவருகின்றனர்.இது கோவையில் பெறும் பாதிப்பை உண்டாக்கும் என்றும் ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். இந்த அரசு உடனடியாக மக்கள் பிரச்சனையை கருத்தில் கொண்டு இதற்க்கு சரியான முடிவை தர வேண்டும் என்று நமது சேனல் வழியாக கேடுக்கொள்கிறோம்.