தடுக்க முயன்ற வழக்கறிஞருக்கும் அருவாள் வெட்டு.
கும்பகோணம் திப்பிராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் ஓணான் செந்தில். வலங்கைமான் போலீஸ் சரகம் உள்ளிட்ட பகுதிகளில் இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.
இந்நிலையில் ஒரு வழக்கு தொடர்பாக திருவாரூர் கோர்ட்டில் ஆஜராகி விட்டு குடவாசல் செல்லூர் நாகலூர் வழியாக காரில் ஊர் திரும்பி கொண்டிருந்தார். வக்கீல்கள் அகிலன், பாரதிராஜா ஆகியோர் உடனிருந்தனர்.
அப்போது எதிரே வந்த காரிலிருந்தவர்கள் இவரது காரை மோதி நிறுத்தி காரிலிருந்த செந்தில்குமாரை சரமாரியாக வெட்டினர். அதை தடுத்த வக்கீல் அகிலனுக்கும் தலையில் அரிவாள் வெட்டு விழுந்தது.
இந்த தாக்குதலில் செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த அகிலனை வக்கீல் பாரதிராஜா மற்றும் அருகிலிருந்தோர் மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தகவலறிந்த குடவாசல் போலீசார் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து கொலைக்குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.