புரட்டாசி மாத நான்காம் சனிக்கிழமையை முன்னிட்டு : ரதத்தில் பெருமாள் புறப்பாடு மற்றும் தீர்த்தவாரி நடைபெற்றது.

0
47
  • தஞ்சாவூர் நாலுகால் மண்டபம் அருள்மிகு ஶ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் இன்று புரட்டாசி மாத நான்காம் சனிக்கிழமையை முன்னிட்டு ரதத்தில் பெருமாள் புறப்பாடு மற்றும் தீர்த்தவாரி நடைபெற்றது.

தஞ்சாவூர் நாலுகால் மண்டபத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஶ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் அமைந்துள்ளது.இக்கோவிலில் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தை சார்ந்த 88 திருக்கோயிலில் ஒன்றாகத் திகழ்கிறது.ஆண்டுதோறும் நான்காம் புரட்டாசி சனிக்கிழமை இன்று ரதத்தில் பெருமாள் இதனைத் தொடர்ந்து தீத்தவாரி நடைபெறுவது வழக்கம்.

இக்கோவிலை தஞ்சை திருப்பதி என பக்தர்கள் அழைப்பார்கள். இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் இன்று புரட்டாசி மாத நான்காம் வார சனிக்கிழமையை முன்னிட்டு காலை ரதத்தில் பெருமாள் எழுந்தருளி பக்தர்கள் வடம் பிடித்து உட்பிரகாரத்தில் சுற்றி வந்து பெருமாளுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து தீர்த்தவாரி நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து பிரசன்ன வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு அலங்காரமும் தீபாராதனையும் பிரசாதம் விநியோகமும் நடைபெற்றது. இந்த வழிப்பாட்டில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தார்கள். இந்த வழிபாட்டிற்காக ஏற்பாடுகளை தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் பரம்பரை செய்து வருகின்றனர்.

ஒவ்வொரு மாதத்திலும் சில நாட்கள் விரத நாட்களாக இருப்பது வழக்கம். ஆனால் புரட்டாசி மாதமோ, சனி விரதம், நவராத்திரி விரதம் என மாதம் முழுவதும் விரதமும், திருவிழா கோலமாக தான் இருக்கிறது. பொதுவாக சனிக் கிழமைகளில் பெருமாளை தரிசிப்பது விசேஷமானது. அதிலும் புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமை நாளில் பெருமாளை வழிபட்டால் எல்லா வித கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்க்கை கிடைக்கப் பெறுவீர்கள் என்பது இந்து மதத்தின் மரபு வழி நம்பிக்கை.

கொஞ்சம் இதையும் படிங்க : https://www.thenewscollect.com/a-petition-has-been-filed-to-ban-the-release-of-tangalan-in-od/

புரட்டாசி மாதம் ஒன்பது கோள்களில் ஒன்றான புதன் கிரகத்திற்கு உரியதாக பார்க்கப்படுகின்றது. புதன் பகவான், அதி தேவதையாக மகா விஷ்ணு உள்ளார். அதனால் புரட்டாசி மாத விரதமும், வழிபாடும் மகாவிஷ்ணுவின் அருளை பெற்று தரும். தனின் வீடு கன்னி ராசியாகவும், அது பெருமாளின் அம்சமாக கருதப்படுகிறது. இந்த புரட்டாசி மாதத்தில் தான் கன்னி ராசியில் சூரியன் அமர்கிறார். அதனால் இந்த மாதத்தில் பெருமாளுக்கு பூஜை, வழிபாடு, பஜனை, பிரம்மோற்சவம் செய்யப்படுகிறது. சனி பகவானும், புதனும் நட்பு கிரகங்கள் என்பதால் புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமை மிக விஷேசமாகப் பார்க்கப்படுகின்றது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here