- தோரணமலை முருகன் கோவிலில் பௌர்ணமி கிரிவலம் கூட்டு பிரார்த்தனையும் நடைபெற்றது. தென்காசி-கடையம் சாலையில் அமைந்துள்ள தோரணமலை ஸ்ரீ முருகன் கோவிலில் ஒவ்வொரு மாத பௌர்ணமி தினத்தன்றும் கிரிவலம் நடைபெறுவது வழக்கம்
புரட்டாசி மாத பௌர்ணமியையொட்டி இன்று (வியாழக்கிழமை) அதிகாலை கிரிவலம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுமார் ஆறரை கிலோ மீட்டர் தூரம் உள்ள கிரிவல பாதையில் கிரிவலம் செய்தனர், தொடர்ந்து கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது.
கொஞ்சம் இதையும் படிங்க : https://www.thenewscollect.com/pillars-of-overhead-water-tank-not-maintained-union-office-besieged-with-empty-jugs/
நாட்டின் மாணவ செல்வங்கள் நன்றாக படித்து ,நாடு உயர்வு பெற முயல வைப்பாய் முருகா , விவசாயம் தழைக்க , விவசாயி செழிக்க அருள் புரிவாய் முருகா, பெருமழை தந்த முருகா ,பெரு வெள்ளம் போன்ற பேரழிவிலிருந்து காப்பாற்று ,நாட்டின் இளைஞர்கள் களைப்பில்லாது உழைத்து , சளைக்காமல் படித்து , பெருவெற்றி பெற அருள்வாய் முருகா.
விட்டு கொடுக்கும் தன்மையை வீடு தோறும் விதைத்திடுவாய் முருகா, நாட்டின் பொருளாதாரம் பெரும் வெற்றி பெற்று … சாமானியனும் சுக வாழ்வு பெற அருள்வாய் முருகா, வடகிழக்கு பருவமழை நல்ல வளத்தை தரவேண்டும் முருகா என
பக்தர்கள் பிரார்த்தனை செய்தனர் . பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.