21 எம் பி-க்கள் கொண்ட எதிர் கட்சி குழு மணிப்பூர் வருகை , கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுடன் சந்திப்பு

0
85
எதிர் கட்சி எம் பி-க்கள் குழு .

‘INDIA ‘ எதிர்க்கட்சி குழு , சனிக்கிழமையன்று மணிப்பூர் கலவரத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட நகரத்தில் ஒன்றான  சுராசந்த்பூருக்குச் வந்தடைந்தது , அங்கு அவர்கள் குக்கி தலைவர்கள் மற்றும் இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தனர்.

முகாமை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ” அவர்களுக்கு இழைக்கப்பட்ட குற்றங்கள் குறித்து சிபிஐ மூலம் விசாரணை நடத்த போவதாக கூறுகிறார்கள் , மத்திய அரசு இது வரை தூங்கிக் கொண்டிருந்ததா என்று கேட்க விரும்புகிறேன். என்று அவர் கேள்வி எழுப்பினார்

திரிணமூல் காங்கிரஸ் தலைவர் சுஷ்மிதா தேவ் கூறுகையில், இரு சமூகங்களின் பிரதிநிதிகளுடன் குழு பேசும். ‘அனைவரின் குரலும் கேட்கப்பட வேண்டும். நாங்கள் குகிஸ் மற்றும் மெய்டீஸ் இருதரப்பினரிடமும்  பேசுவோம்,’ என்று அவர் கூறினார்.Opposition delegation

மணிப்பூர் முகாம்களில் விளையாடும் சிறுவர்கள் 

எதிர்க் கட்சியான இந்தியாவைச் சேர்ந்த 21 எம்.பி.க்கள் கொண்ட குழு  முன்னதாக இம்பாலை வந்தடைந்தது , பின்னர் அவர்கள் இரண்டு ஹெலிகாப்டர் விமானங்களில் சுராசந்த்பூருக்கு வந்து சேர்ந்தனர் .

சவுத்ரி தலைமையிலான குழுவினர், சுராசந்த்பூர் கல்லூரியின் ஆண்கள் விடுதியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமை பார்வையிட்டனர்.

மக்களவையில் காங்கிரஸின் துணைத் தலைவர் கௌரவ் கோகோய் உள்ளிட்டோர்  அடங்கிய மற்றொரு குழு, சுராசந்த்பூரில் உள்ள டான் போஸ்கோ பள்ளியில் உள்ள நிவாரண முகாமுக்குச் சென்றனர் .

இம்பாலுக்குத் திரும்பிய பிறகு, சௌத்ரி தலைமையிலான குழுவினர், பிஷ்னுபூர் மாவட்டத்தில் உள்ள மொய்ராங் கல்லூரியில் உள்ள நிவாரண முகாமுக்குச் சென்று, மெய்டீஸ் சமூகத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்கச் செல்லும்.

மற்றொரு எம்.பி.க்கள் குழு, இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள அகம்பாட்டில் உள்ள ஐடியல் கேர்ள்ஸ் கல்லூரி நிவாரண முகாமுக்குச் சென்று பார்வையிட்ட பின்னர் , இம்பாலின் மேற்கில் உள்ள லம்போய்கோங்காங்காங்கில் உள்ள மற்றொரு முகாமுக்கு பாதிக்கப்பட்டோர்களை பார்வையிட செல்வார்கள்.

ஞாயிற்றுக்கிழமை காலை, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குழு மணிப்பூரிலுள்ள  ராஜ்பவனில் ஆளுநர் அனுசுயா உய்கேயை சந்தித்து, தற்போதைய நிலைமை மற்றும் மணிப்பூரில் விரைவில் அமைதியைக் கொண்டுவருவதற்கான சாத்தியமான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க உள்ளது.

மணிப்பூருக்கு சென்றுள்ள எம் பி க்கள் குழு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தேசிய தலைநகரான டெல்லிக்கு  திரும்ப திட்டமிடப்பட்டுள்ளது .

மே 3 அன்று மலை க்ரமங்களில்  ‘பழங்குடியினர் ஒற்றுமை அணிவகுப்பு’ போது மணிப்பூரில் இன மோதல்கள் வெடித்தது , இந்த மோதல்களால் இதுவரை 160 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர் .

மணிப்பூரின் மக்கள்தொகையில் சுமார் 53 சதவீதமான மெய்டீஸ் மக்கள் இம்பால் பள்ளத்தாக்கில் வாழ்கின்றனர். மேலும் மற்றொரு பகுதியில் பழங்குடியினர் — நாகர்கள் மற்றும் குக்கிகள் வசிக்கின்றனர் இவர்கள்  மக்கள் தொகையில் 40 சதவிகிதம் ஆவார்கள் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here