திண்டிவனம் அடுத்த மயிலத்தில் உள்ள மயிலம் வள்ளி தெய்வானை உடனுறை ஸ்ரீசுப்பிரமணியர் சுவாமி ஆலயத்தில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர தேர் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
இதேபோன்று இந்த ஆண்டு பங்குனி உத்திர தேர் திருவிழா கடந்த 15 ஆம் தேதி அன்று காலை 6.45 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது.

இதனை தொடர்ந்து 19 ஆம் தேதி இரவு தங்கமயில் வாகன உற்சவமும், 22 திருக்கல்யாணம் வெள்ளிக்குதிரை வாகன உற்சவமும், இன்று திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது தேரை ஸ்ரீமத் சிவஞான பாலய 20 ஆம் பட்டம் சுவாமிகள் வடம் பிடித்து இழுத்து வைத்தார்.

அப்போது பக்தர்கள் முருகனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா என உற்சாகமாக பக்தியுடன் திரை வடம் பிடித்து இழுத்தனர். அதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகன் அருள் பெற்றனர்.
இதனை தொடர்ந்து வரும் 24 ஆம் தேதி அன்று காலை பங்குனி உத்திர தீர்த்த வாரியும், அன்று இரவு தெப்ப உற்சவமும் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து 25 ஆம் தேதி் இரவு முத்து பல்லக்கு உற்சவமும் விமரசியாக நடைபெற உள்ளது.

இதற்கான பணிகளை ஸ்ரீமத் சிவஞான பாலய 20 ஆம் பட்டம் சுவாமிகள் மற்றும் கோயில் நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் என அனைவரும் சிறப்பாக செய்து வருகின்றனர்.
அதில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் அழகுகள் குத்தியும் காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.

அதில் அமைச்சர் செஞ்சி மஸ்தான், மயிலம் சிவக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்த தேர் திருவிழாவில் எந்த விதமான அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் திண்டிவனம் டிஎஸ்பி சுரேஷ் பாண்டியன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்.