வனப்பகுதியை விட்டு வெளியேறி உணவு தேடி ஊருக்குள் காட்டு யானைகள் வருவது அதிகரித்துள்ளது. அவ்வாறு வரக் கூடிய காட்டு யானைகள் உணவிற்காக விவசாய பயிர்களையும், வீடுகளையும் சேதப்படுத்தி வருகிறது. உணவு தேடி ஊருக்குள் வரும் காட்டு யானைகள் வீடுகளை சேதப்படுத்துவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கோவை மேற்கு மலைத்தொடர்ச்சியை ஓட்டி இருக்கும் கிராமங்களில் யானைகள் உணவு தேடி வருவது வாடிக்கையானது.
காட்டிற்குள் போதுமான உணவு கிடைக்காததும், வாழை ,தென்னை, தக்காளி,அரிசி, சர்க்கரை, கோதுமை போன்ற உணவுகளை சாப்பிட்டு பழகப்பட்டதாலும் அடிக்கடி யானைகள் ஊருக்குள் வருகின்றன. இந்நிலையில் நேற்றிரவு மருதமலை அடிவாரப்பகுதியிலுள்ள சோமயாபாளையம் பகுதியில் நான்கு யானைகள் வந்துள்ளன.
அரிசியின் வாசத்தை நூகர்ந்த யானைகள் வீடுகளின் கதவை உடைத்து , உணவை தேடிய போது அருகிலிருந்தவர்கள் சப்தமிட்டு யானைகளை துரத்தினர். கடந்த சில தினங்களாக ரேசன் அரிசி கடையில் புகுந்து அரிசி மற்றும் சர்க்கரை கோதுமையை எடுத்து சாப்பிட்ட யானைகள் தற்போது காலனிப்பகுதியில் உணவு தேடி கதவை உடைத்து, பொருட்களை சேதப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வனத்துறையிடம் முறையிட்டாலும் , அதிகாரிகள் வருவதில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.
வனப்பகுதியில் அதிகாரிகள் வேலை செய்கின்றனரா என்ற எண்ணம் பார்ப்பவர்கள் மத்தியில் எழுந்த்கிருக்கிறது. வெளிநாடுகளுக்கு நிகராக பாதுகாப்பை உருவாக்கி வைத்திருக்கிறோம் என்று கூறி இங்கே விலங்குகலையும் மக்களையும் நட்டாத்தில் விட்டுவிடுவது தான் உஙள் பாதுகாப்பா? என்று அரசியல் விமர்சகர்கள் விமர்சித்து வருகின்றனர்.