பொள்ளாச்சி அருகே உள்ள எஸ் சந்திரபுரம் பகுதியில் கவுரி சங்கர் என்பவர் கல்குவாரி வைத்துள்ளார். இந்த கல்குவாரியில் இறந்த நிலையில் ஒரு இளைஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் கல்குவாரி உரிமையாளரிடம் வாலிபர் இறந்த நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளனர். உரிமையாளர் தாலுகா காவல் நிலைய போலீசாருக்கு தகவல் அளித்ததன் பேரில், பொள்ளாச்சி ஏ எஸ் பி பிருந்தா தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் இறந்து கிடந்தவர் பொள்ளாச்சி நேதாஜி ரோட்டை சேர்ந்த அருண் என்பது தெரியவந்தது. மேலும் , சந்திரா புரத்தைச் சேர்ந்த சூரிய பிரகாஷ், அரவிந்த், இறந்த அருண் மூவரும் நண்பர்கள் எனவும், நேற்று இரவு மது அருந்தியுள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் பொள்ளாச்சியை சேர்ந்த அருணை இருவரும் அடித்து கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது. போலீசார் மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.