பொள்ளாச்சி பேருந்து நிலையம் அருகே அதிமுகவுடன் பாஜக கூட்டணி இல்லை என அறிவிப்பை ஏற்று பிஜேபி கட்சியினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்..
பிஜேபி மாநிலதலைவர் அண்ணாமலை தொடர்ந்து அண்ணா, பெரியார், ஜெயலலிதா போன்ற இறந்த தலைவர்களை கொச்சைப்படுத்தி பேசியதாகவும் மேலும் தற்போதைய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமையும் கொச்சைப்படுத்தி பேசியதற்கு அதிமுக தலைவர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.தொடர்ந்து அதிமுக தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்த வண்ணம் இருந்து வந்த நிலையில் பாஜக வினர் அமைதி காத்து வந்த நிலையில்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பிஜேபி அதிமுகவுடன் கூட்டணியில் இல்லை என அறிவிப்பை வெளியிட்டார்..
மேலும் இது தனிப்பட்ட முடிவல்ல கட்சியின் முடிவு எனவும் தெரிவித்தார் இதை ஏற்றுக் கொண்ட பிஜேபி கட்சியினர் மகிழ்ச்சி அடைந்த நிலையில் பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே நகரத் தலைவர் பரமகுரு தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை கொண்டாடினர்..