சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.
உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலின் பின் நிற்கின்றது, அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத் தொழிலே சிறந்தது.
அனைவருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள். திருவிழாக்கள் பெரும்பாலும் கடவுள் நம்பிக்கை சார்ந்து கொண்டாடப்படுவது வழக்கம். பொங்கல் பண்டிகை மட்டுமே மனித சக்தியின் வெளிப்பாடாக கொண்டாடப்பட்டு வருகிறது. தங்களின் தேவைகளை பூர்த்தி செய்து அதன் மூலம் மகிழ்ச்சி அடைகிற மனிதர்கள் அதற்காக ஒரு விழா எடுத்துக் கொண்டாடுகிறார்கள் என்றால் அது பொங்கல் பண்டிகை தான். மனித உழைப்பிற்கு மட்டுமல்லாமல் தங்களுக்காக பாடுபடும் விலங்கினத்தையும் போற்றும் வகையில் கொண்டாடப்படும் விழா பொங்கல் விழா. உலக நாட்டிலே தங்களுக்கு உழைக்கிற விலங்கினங்களை போற்றி கொண்டாடுகிற ஒரே இனம் தமிழ் இனம். ஆண்டு முழுவதும் தங்களுடைய விவசாய நிலத்தில் பணியாற்றி விளைச்சலை அறுவடை செய்து ஆனந்தத்தில் மகிழ்ந்து கொண்டாடுகிற விழாவாக பொங்கல் பண்டிகை திகழ்ந்து வருகிறது. தற்போது ஜாதி மதங்களைக் கடந்து பொங்கல் விழா நடந்து வருவதை நாம் அறிவோம் தொடர்ந்து இதே உற்சாகத்தோடு மனித சக்தியை போற்றுவோம்.
ஆசிரியர்
தி நியூஸ் கலெக்ட்.