- பொன்னேரி அருகே சென்னை மாநகராட்சி என்ற பெயர் கொண்ட டிராக்டர் மூலம் குப்பைக் கழிவுகளை சாலையோரம் கொட்டியதால் பொதுமக்கள் கொந்தளிப்பு டிராக்டரை மடக்கி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த பொதுமக்கள் சென்னை மாநகராட்சி குப்பை வண்டிக்கு இங்கு என்ன வேலை எனவும் பொதுமக்கள் கேள்வி ?
திருவள்ளூர் மாவட்டம் , பொன்னேரி அருகே கவரைப்பேட்டையில் சாலையோரம் கொட்டப்படும் குப்பை, கழிவுகளால் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. கவரைப்பேட்டை சுற்றுப்பகுதிகளில் உள்ள ஊராட்சிகளில் நாள்தோறும் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் இருந்து சேகரிக்கப்படும் குப்பை, கழிவுகள் கவரைப்பேட்டை – சத்தியவேடு சாலையில் சாலையோரத்தில் கொட்டப்படுகின்றன.
தொடர்ந்து புகார் எழுந்த நிலையில் கடந்த வாரம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் முழுமையாக குப்பைகள் அகற்றப்பட்டு குப்பைகள் இருந்த இடம் சீரமைக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து அதே இடத்தில் சென்னை மாநகராட்சி என்ற பெயர் பொறிக்கப்பட்ட டிராக்டர் மற்றும் பதிவு எண் இல்லாத ட்ரெய்லர் மூலம் கெட்டுப்போன உணவுப் பொருட்களை அதே பகுதியில் கொட்ட வந்ததாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்த பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு சென்று டிராக்டரை மடக்கிப்பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் சென்னை மாநகராட்சி என்ற பெயர் கொண்ட டிராக்டருக்கு கவரப்பேட்டையில் என்ன வேலை எனவும் இந்த கெட்டுப்போன உணவு கழிவுகள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது எனவும் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
தகவல் அறிந்த கவரப்பேட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தி சென்னை மாநகராட்சி என்ற பெயர் பொறிக்கப்பட்ட டிராக்டரை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் இங்கு கொட்டப்படும் குப்பை கழிவிலிருந்து வெளியேறும் துர்நாற்றம் காரணமாக சுவாசப் பிரச்சினைகள் ஒருபுறமும் கொசுக்கள் உள்ளிட்ட பூச்சிகளின் தொந்தரவு ஒரு புறம் இருப்பதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.
சாலைகளில் கிடக்கும் குப்பை கழிவுகள் மீது வாகனங்கள் ஏறி இறங்கும் போது நிலை தடுமாறி கீழே விழும் சமயங்களில் பின்னால் வரும் கனரக வாகனங்கள் வாகன ஓட்டிகள் மீது ஏற்றி உயிரிழப்பு ஏற்படும் சூழல் உள்ளதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.
கெட்டுப்போன உணவு கழிவுகளை கொட்ட வந்த டிராக்டர் மற்றும் ஓட்டுநரை அங்கிருந்த பொதுமக்கள் கவரப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்து அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் சரவணன் போலீசில் புகார் அளித்துள்ளார்.
கொஞ்சம் இதையும் படிங்க : https://www.thenewscollect.com/the-tragedy-of-carrying-the-bodies-of-the-dead-near-orathanadu-down-into-the-river-peoples-demand-to-build-a-bridge/
மேலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சென்னை மாநகராட்சி என்ற பெயர் கொண்ட டிராக்டர் ஏன் 50 கிலோமீட்டர் கடந்து இங்கே ஊராட்சிகளில் அந்த டாக்டர்கள் பயன்படுத்தப்படுகிறது எனவும் இது குறித்து போலீசார் விசாரித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.