தமிழ்நாடு வந்தடைந்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு.!

0
86
ஜனாதிபதி திரவுபதி முர்மு

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வருகை தர உள்ளார்.அதன்படி அவர், டெல்லியில் இருந்து காலை 11.30 மணிக்கு தனி விமானத்தில்
புறப்பட்டு கர்நாடக மாநிலம் மைசூருவுக்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து தனி ஹெலிகாப்டரில் முதுமலை அருகே மசினகுடியில் உள்ள ஹெலிபேடுக்கு வந்திறங்குகிறார்.

ஜனாதிபதி திரவுபதி முர்மு

தொடர்ந்து காரில், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்கு செல்கிறார். அங்கு ஆதிவாசி மக்கள் மற்றும் பாகன்களை சந்திக்கிறார். வளர்ப்பு யானைகளை பார்வையிடுகிறார். பின்னர் ‘தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்’ ஆவணப்படத்தில் இடம் பிடித்த பாகன் தம்பதி பொம்மன்-பெள்ளி ஆகியோரை சந்தித்துவிட்டு மாலை 5 மணிக்கு அங்கிருந்து புறப்படுகிறார். இதன் காரணமாக தெப்பக்காடு பகுதி காவல்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.  கடும் சோதனைக்கு பிறகே  தெப்பக்காடு வரும் அனைவருக்கும் அனுமதி வழங்கப்படுகிறது. குடியரசுத் தலைவர் ஹெலிகாப்டர் மூலம் வருகைபுரிய  இருப்பதால் மசினகுடியில் ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கான முன்னோட்டங்கள் நடைபெற்றுள்ளது.
அத்துடன் மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் அந்தந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். முதுமலை புலிகள் காப்பகம் ஐந்து அடுக்கு உயர் பாதுகாப்பு வலையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் காரணமாக ட்ரோன்கள் பறக்க வனத்துறை தடை விதித்துள்ளது.

குடியரசுத் தலைவர் வருகையையொட்டி மசினகுடி ஹெலிபேடு, தெப்பக்காடு யானைகள் முகாம்களில் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு நடவடிக்கையாக அனைத்து விடுதிகளிலும் சுற்றுலா பயணிகளை தங்க அனுமதிக்கக்கூடாது என விடுதி உரிமையாளர்களுக்கு போலீசார் உத்தரவு பிறப்பித்துள்ளனர். அப்படியிருக்கையில் இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு அவர்கள் இன்று தமிழ்நாடு புலிகல் காப்பகத்திற்க்கு வந்தடைந்தார்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி ஏற்ற பிறகு முதன்முறையாக நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள முதுமலை புலிகள் காப்பகத்துக்கு இன்று மாலை வருகை தந்தார். நீலிகிரி முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள யானைகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பார்வையிட்டார்.

ஜனாதிபதி திரவுபதி முர்மு

முகாமில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, ஆஸ்கர் விருது பெற்ற தி எலிபண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்தில் நடித்து உலகம் முழுவதும் புகழ் பெற்ற பாகன் தம்பதிகளான பொம்மன், பெள்ளியை நேரில் சந்தித்து பேசினார். மேலும், ஆஸ்கர் விருது வென்ற தி எலிபாண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்பட புகழ் ‘பொம்மி’ யானைக்கு கரும்பு வழங்கினார். அதனை தொடர்ந்து முகாமில் உள்ள பாகன்கள் மற்றும் பழங்குடியின மக்கள் மற்றும் தன்னார்வ அமைப்பு பிரதிநிதிகளை சந்தித்து பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here