என்எல்சி நிர்வாகத்தை கண்டித்து இன்று கடலூரில் நடந்த போராட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டார். தையடுத்து தொண்டர்கள் சிலர் போலீஸ் வாகனத்தின் அடியில் தலைவைத்து முதல்வன் பட பாணியில் அன்புமணி ராமதாஸை அங்கிருந்து அழைத்து செல்ல விடாமல் தடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் என்எல்சி நிறுவனத்தை விரிவாக்கம் செய்யும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.அதாவது என்எல்சி நிலக்கரி சுரங்கம் விரிவாக்க பணிகளுக்காக வளையமாதேவியில் இன்னும் 2 மாதத்தில் அறுவடைக்கு தயாரான விளைநிலங்களில் ஜேசிபி,பொக்லைன் இயந்திரங்கள் இறங்கி நிலத்தில் கால்வாய் அமைக்கும் பணியை தொடங்கின.
இதற்கு பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் போலீஸ் பாதுகாப்புடன் இந்த பணிகள் நடந்து வந்தது. இதனை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் இன்று போராட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இன்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் பாட்டாளி மக்கள் கட்சி அடக்குமுறைகளை எதிர்கொண்டு வளர்ந்த கட்சி. கைது, தடியடி, கண்ணீர்புகை குண்டு வீச்சு போன்ற அடக்குமுறைகளை ஏவுவதன் மூலம் பா.ம.க.வை கட்டுப்படுத்த முடியாது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
வேளாண் விளை நிலங்கள் கையகப்படுத்தப்படுவது கைவிடப்பட வேண்டும். என்.எல்.சி. நிறுவனம் தமிழ்நாட்டில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து ஒரு போதும் பின்வாங்காது. இறுதி வெற்றி கிடைக்கும் வரை அறவழியில் போராட்டம் தொடரும் என அவர் ராமதாசு.