மணிகண்டன் (26)
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஆண்டகலூர் கேட்டில் நின்ற கல்லூரி மாணவி லிப்ட் கேட்ட நிலையில் இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்று கற்பழித்த இளைஞரை போலீஸார் இன்று கைது செய்துள்ளனர்.கரூர் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் ராசிபுரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் (பாவை கல்லுரி), முதலாம் ஆண்டு எம்பிஏ படித்து வருகிறார்.
செவ்வாய்க்கிழமை காலை கரூரில் இருந்து ஆண்டகளூர்கேட் பகுதிக்கு பஸ்ஸில் வந்து இறங்கிய அந்த மாணவி, கல்லூரிக்கு நேரம் ஆனதால் அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவரிடம் கல்லூரி வரை லிப்ட் கேட்டுள்ளார். மாணவியை இருசக்கர வாகனத்தில் ஏற்றிச்சென்ற அந்த இளைஞர் தன் அக்கா பிரசவ வழியில் துடித்துக் கொண்டிருப்பதாக கூறி அணைப்பாளையம் புறவழிச் சாலை வழியாக சிங்களாந்தபுரம் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அங்குள்ள மழை கரடு அடிவாரப் பகுதிக்கு அம்மாணவியை அழைத்துச் சென்றவர். அங்கு வலுக்கட்டாயமாக மாணவியை மானபங்கம் செய்ததாக கூறப்படுகிறது.மேலும் மாணவியிடம் இருந்து ரொக்கம் 140 ரூபாய் மற்றும் அலைபேசியை பறிமுதல் செய்து கொண்டு ஆடையே இல்லாமல் விட்டு விட்டு அங்கிருந்து தப்பி சென்றாதாக கூறப்படுகிறது.
மதியம் மூன்று மணியளவில் மயக்கம் தெளிந்த மாணவிகூச்சலிட்டு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ராசிபுரம் மகளிர் காவல் நிலையம் வந்து அந்த மாணவி இது குறித்து புகார் தெரிவித்ததையடுத்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தனிப்பட அமைக்கப்பட்டு விசாரணை நடத்திய போலீஸார். தொப்பப்பட்டி ராஜவீதி பகுதியைச் சேர்ந்த, பெரியசாமி என்பவரது மகன் ஐயப்பன் என்ற மணிகண்டன் (26) இதில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரிய வந்தது.டிப்ளமோ முடித்துள்ள இவர், ஒன்பதாம் பாலிகாடு பகுதியில் உள்ள கரும்பு அரவை ஆலையில் ஊழியராக பணியாற்றி வருகிறார் என்பதும் தெரியவந்தது .
இதனை அடுத்து ராசிபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் டி.கே.கே .செந்தில்குமார் உத்தரவின் பேரில் அப்பகுதிக்குச் சென்ற தனிப்படை போலீஸார் புகார் கொடுக்கப்பட்ட மூன்று மணி நேரத்தில் அவரை கைது செய்தனர். மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.கல்லூரிக்கு காலதாமதம் ஆனதையடுத்து லிப்ட் கேட்டு சென்ற மாணவி கற்பழிக்கப்பட்ட விவகாரம் ராசிபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது…
நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணா கொடுத்த பத்திரிகை செய்தியில் கல்லூரி நிலையத்தையும் மாணவியின் பெயரையும் குறிப்பிட வேண்டாம், காட்ட வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார்…