சாதனை படைத்த அமரன் படம் ..நான்கு நாட்களின் ரூ. 150 கோடி வசூல …

The News Collect
2 Min Read
  • ரூ. 150 கோடிப்பு: நாலே நாளில் வசூலை அள்ளிக்குவித்த அமரன்: சிவகார்த்திகேயன் கெரியரில் இது தான் ஃபர்ஸ்ட்.

சிவகார்த்திகேயனின் அமரன் படம் ரிலீஸான நான்கே நாட்களில் உலக அளவில் ரூ. 150 கோடி வசூல் செய்திருக்கிறது. சிவகார்த்திகேயனின் கெரியரில் நான்கு நாட்களில் ரூ. 150 கோடி வசூல் செய்த முதல் படம் அமரன் ஆகும்.

- Advertisement -
Ad imageAd image

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி முதல் முறையாக ஜோடியாக நடித்த அமரன் படம் தீபாவளி பண்டிகை அன்று தியேட்டர்களில் ரிலீஸானது. நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த மேஜர் முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படத்தை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.

இந்நிலையில் அமரன் படம் ரிலீஸான 4 நாட்களிலேயே உலக அளவில் ரூ. 150 கோடி வசூல் செய்திருக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது.சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடித்த அமரன் படத்தை உலக நாயகன் கமல் ஹாசன் தயாரித்தார்.

படம் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அமரன் குழுவினரை நேரில் அழைத்து பாராட்டினார். அமரன் படத்தின் இறுதியில் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை என ரஜினி தெரிவித்த வீடியோ வைரலானது. மேலும் நண்பர் கமலுக்கு போன் செய்து இப்படியொரு படத்தை தயாரித்ததற்காக பாராட்டியிருக்கிறார்.

அமரன் படத்தை பாராட்டிய ரஜினிகாந்துக்கு கமல் ஹாசனும், சிவகார்த்திகேயனும் நன்றி தெரிவித்தார்கள். முன்னதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் அமரன் படத்தை பார்த்துவிட்டு பாராட்டினார்கள்.

கடைசியில் கண் கலங்கிவிட்டேன் என கமல் ஹாசனிடம் தெரிவித்தார் ஸ்டாலின். படம் நல்லா இருக்கு என்றார் உதயநிதி ஸ்டாலின். அமரன் படத்தில் மேஜர் முகுந்த் வரதராஜனாகவே வாழ்ந்திருக்கிறார் சிவகார்த்திகேயன் என அனைவரும் பாராட்டுகிறார்கள்.

படம் பற்றி பலரும் சமூக வலைதளங்களில் நல்லவிதமாக பேசுவதால் அதன் வசூல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.பண்டிகை விடுமுறை நாட்களை குறிவைத்து அமரன் படத்தை ரிலீஸ் செய்தது வீண் போகவில்லை. தீபாவளி பண்டிகை ஸ்பெஷலாக வெளியான ஜெயம் ரவியின் பிரதர், கவினின் ப்ளடி பெக்கர் ஆகிய படங்களை விட அமோகமாக வசூல் செய்து கொண்டிருக்கிறது அமரன்.

கொஞ்சம் இதையும் படிங்க :  https://www.thenewscollect.com/petition-seeking-an-order-to-quash-the-dismissal-of-the-president-of-surulipatty-panchayat-council-theni-district/

சிவகார்த்திகேயனின் கெரியரில் ரிலீஸான வேகத்தில் ரூ. 150 கோடி வசூல் செய்த முதல் படம் அமரன் என்பது குறிப்பிடத்தக்கது.

அமரன் படம் ரிலீஸான அன்று இந்தியாவில் மட்டும் ரூ. 21.40 கோடி வசூல் செய்தது. இரண்டாவது நாளில் ரூ. 19.15 கோடியும், மூன்றாவது நாளில் ரூ. 21.4 கோடியும், நான்காவது நாளில் ரூ. 21.50 கோடியும் வசூல் செய்திருக்கிறது. இந்தியாவில் மட்டும் இதுவரை ரூ. 83.45 கோடி வசூல் செய்திருக்கிறது அமரன் படம்.

Share This Article
Leave a review