இறந்தவரின் உடலை பொதுபாதையில் எடுத்துச் செல்ல ஒரு தரப்பினர் மறுப்பு பதட்டம் போலீஸ் குவிப்பு

0
173
இறந்தவரின் உடல்

தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், ஊமத்தநாடு ஊராட்சி, ஆலடிக்காடு கிராமத்தை சேர்ந்த மறைந்த வைத்திலிங்கம் என்பவர் மனைவி பாலாம்மாள் (75)  உடல்நலக்குறைவால் இறந்தார்.

இந்நிலையில், இன்று  காலை அவரது சடலத்தை அடக்கம் செய்வதற்காக அவரது மகன் பாஸ்கர் உள்ளிட்ட உறவினர்கள் வேன் மூலம் ஏற்றி சுடுகாடு கொண்டு சென்றனர்.

பொதுமக்கள்

இந்நிலையில், இன்று  காலை அவரது சடலத்தை அடக்கம் செய்வதற்காக அவரது மகன் பாஸ்கர் உள்ளிட்ட உறவினர்கள் வேன் மூலம் ஏற்றி சுடுகாடு கொண்டு சென்றனர்.வழியில் ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் குடியிருப்பு வழியாக கொண்டு செல்லக்கூடாது. ஏற்கனவே செல்லும் பாதையில் தான் சடலத்தை கொண்டு செல்ல வேண்டும். புதிய சுடுகாடு அமைக்க உள்ள இடத்தின் அருகே தங்கள் கோயில் உள்ளது எனக் கூறி சாலையில் முள்ளை வெட்டிப் போட்டும், அமர்ந்தும் தடுத்து நிறுத்தியதால் காலை 10 மணி முதல் 4 மணி கொளுத்தும் வெயிலில் சடலத்தை ஏற்றி வந்த வேனை சாலையிலேயே நிறுத்தி விட்டு, காத்திருந்தனர்.

சாலையில் இறுதி ஊர்வல வாகனம்

இரு வேறு சமூகம் என்பதால் பதட்டமான சூழல் நிலவியது. இதையடுத்து தஞ்சை கூடுதல் எஸ்பி ஜெயச்சந்திரன், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அக்பர் அலி பேராவூரணி வட்டாட்சியர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில்,  இருதரப்பினருக்கும் இடையே சுமூக தீர்வு ஏற்பட்டதையடுத்து, மூதாட்டியின் சடலம் எடுத்து செல்லப்பட்டு, எரியூட்டப்பட்டது. இதன் காரணமாக அங்கு ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here