தமிழக மின்சார துறைக்கு, ஒழுங்குமுறை ஆணையம் முக்கிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. அத்துடன், இது தொடர்பாக கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளது. தமிழ்நாட்டில் எப்போதுமே, கட்டுமானப்பணிகள் முடிந்த பிறகு தான் மின் இணைப்பு, குடிநீர் குழாய் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு ஆகிய வசதி பெற முடியும் என்ற நிலைமை இருந்தது. ஆனால், தற்போது இது மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் மின்வாரியம் முக்கிய அறிவிப்பு ஒன்றை, அனைத்து மாநகராட்சி, நகராட்சி ஆணையர்களுக்கு உத்தரவு வெளியிடப்பட்டிருந்தது. அதில், நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளில்
தமிழ்நாடு ஒருங்கிணைந்த மற்றும் கட்டிட விதிகள் 2019, விதி எண் 20-ன் படி கட்டிடங்களுக்கு கட்டுமான நிறைவு சான்றில்லாமல், மின் இணைப்பு வசதி, குடிநீர் குழாய் மற்றும் பாதாளசாக்கடை இணைப்பு வசதி உள்ளிட்டவற்றை வழங்கலாம் என்று தெரிவித்திருந்தது. நகராட்சி நிர்வாகத்துறை: நகராட்சி நிர்வாகத்துறை உத்தரவை அமல்படுத்துவதால், இனி வரக் கூடிய காலங்களில் கட்டிட முடிவு சான்று இல்லாமலேயே சொந்த வீடுகளோ, சொந்த தொழிற்சாலைகளுக்கும் அல்லது கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்களுக்கு மின் இணைப்பு வசதியை வழங்கலாம் என்று மின்வாரியம் கூறியிருந்தது மிகுந்த மகிழ்ச்சியை தந்திருந்தது.
இதன் மூலமாக தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளில் கட்டக் கூடிய அனைத்து வீடுகள், தொழிற்சாலை கட்டிடங்கள் அனைத்திற்கும் மின் இணைப்பு வசதி, குடிநீர் குழாய் இணைப்பு,
பாதாள சாக்கடை இணைப்பு வசதி பெற கட்டிட முடிவு சான்று கிடைக்கும் வரை பொதுமக்கள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்பதால், ஒருவகையில் நிம்மதியை இந்த அறிவிப்பு மக்களுக்கு தந்திருந்தது.
மின்வாரியம்:
ஆனால், மின்வாரியம் உத்தரவிட்டபிறகும்கூட, வீட்டு பயன்பாட்டிற்கு மின் இணைப்பில் இருந்து, வணிக பயன்பாட்டிற்கு மாற்ற
விண்ணப்பிக்கும் நுகர்வோரிடம் கட்டிடப் பணி நிறைவு சான்று சமர்ப்பிக்க சொல்கிறார்களாம். அப்படி சமர்பிக்காமல் இருந்தால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் சில இடங்களில் எச்சரிக்கையும் விடப்படுகிறதாம். இதுகுறித்து, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், மின்வாரியத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறது. அந்த கடித்தில் உள்ளதாவது,
கட்டிப்பணி நிறைவு சான்று:
“வீட்டு பயன்பாட்டுக்கான மின் இணைப்பிலிருந்து, வணிக பயன்பாட்டுக்கு மாறுவதற்கு விண்ணப்பிக்கும் நுகர்வோரிடம் கட்டிடப்பணி நிறைவு சான்று சமர்ப்பிக்க சொல்வதாக தகவல்கள் வருகின்றன. இந்த விவகாரம் குறித்து, கோவை அருகே கவுண்டம்பாளையத்தை சேர்ந்த எஸ்.மைக்கேல் ராஜ் என்பவருக்கு
மின்வாரியம் அனுப்பிய நோட்டீஸில், “வீட்டு பயன்பாட்டுக்கான மின் இணைப்பில் இருந்து வணிக பயன்பாட்டுக்கு மாறுவதற்கு கட்டிட பணி நிறைவு சான்று சமர்ப்பிக்க வேண்டும். இல்லாவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மைக்கேல் ராஜ், ஆணையத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “இதுவரை கட்டண விகித மாற்றத்துக்கு கட்டிடப்பணி நிறைவு சான்று சமர்ப்பிக்க வேண்டும் என்றோ, மின் இணைப்பை துண்டிக்கலாம் என்றோ எந்த வழிகாட்டுதலும் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக தமிழக அரசின் ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகளிலும்கூட சொல்லப்படவில்லை.
அறிவுறுத்தல் :
12 மீட்டர் உயரத்துக்கு மேல் உள்ள வணிகக்கட்டிட உரிமையாளர் புதிய மின் இணைப்பு கோரும் பட்சத்தில் மட்டுமே கட்டிடப்பணி நிறைவு சான்று சமர்ப்பிக்க வேண்டும். மற்றபடி மின் நுகர்வோரிடம் (தற்காலிக இணைப்பு தவிர) இருந்து மின் இணைப்பு கட்டண விகித மாற்றத்துக்கு கட்டிடப்பணி நிறைவு சான்று சமர்ப்பிக்க தேவையில்லை. இது தொடர்பாக கள அலுவலகர்களுக்கு தக்க அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும் என்று” அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.