பல்லடம் அரசு மருத்துவமனையில் நேற்று இரவு வெட்டி கொலை செய்யப்பட்ட4 நபர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை முடிவடைந்த நிலையில் உடல்களை வாங்க உறவினர்கள் மறுத்ததுடன் கொலை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரையும் இன்று மாலை 5 மணிக்குள் போலீசார் கைது செய்ய வேண்டும், தவறும் பட்சத்தில் மாலை 5 மணிக்கு பின்னர் மீண்டும் சாலை மறியல் போராட்டம் நடத்துவோம் என பாரதிய ஜனதா கட்சியினர் அறிவித்துள்ளனர்.
பல்லடம் பகுதியில் உள்ள திருச்சி- கோவை தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல் போராட்டம் நடைபெற்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது முன்னதாக வீட்டின் அருகே குடிபோதைகள் இருந்தவரிடம் தட்டிக் கேட்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை அருவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் அந்த பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் தொடர்ந்து உறவினர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.