கூடங்குளம் அணுமின் நிலைய உதிரி பாகங்கள் ஏற்றி வந்த மிதவை கப்பல் பாறை இடுக்கில் சிக்கியதில் மீட்பு பணிகள் நிறுத்தம்.

0
358
மிதவை கப்பல்

கூடங்குளம் அனுமின் நிலையத்திற்கு தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து மிதவை கப்பலில் வந்த ஐந்து மற்றும் ஆறாவது அணு உலைகளுக்கான ஸ்டீம் ஜெனரேட்டர் எனப்படும் நீராவி உற்பத்தி கலன் கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே கடலில் பாறையில் சிக்கியது .இதன் மீட்பு பணிகள் காலையில் இருந்தே நடைபெற்றது .என்றாலும் மாலையில் கடலின் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதினாலும், வெளியிடங்களில் இருந்து பிற தொழில்நுட்ப வல்லுனர்கள் வருவதனாலும் மீட்பு பணிகள் நிறுத்த பட்டுள்ளது. மேலும் கடலில் நீர்மட்டம் உயர்ந்து காற்றின் வேகம் குறைந்தால் தான் மீட்பு பணிகளை முழுமையாக செய்ய முடியும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர் .நாளை காலை மீண்டும் மீட்பு பணிகள் தொடங்கப்படும் என தெரிகிறது.

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஒன்று மற்றும் இரண்டாவது அணு உலைகளில் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி தற்பொழுது நடைபெற்று வருகிறது .
மேலும் மூன்று மற்றும் நான்காம் அணு உலைகளின் கட்டுமான பணிகள் நிறைவுறும் தருவாயில் உள்ளன .

இந்த நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு ஐந்து மற்றும் ஆறாவது அணு உலைகளுக்கான ஸ்டீம் ஜெனரேட்டர் எனப்படும் நீராவி உற்பத்தி செய்யும் இயந்திரம் ரஷ்யாவில் இருந்து கடல் மார்க்கமாக தூத்துக்குடி துறைமுகத்திற்கு கடந்த ஒன்றை மாதத்திற்கு முன்பு வந்து சேர்ந்தது .

கடலின் நீர்மட்டத் தன்மை, காற்றின் வேகம்,கடலின் நீரோட்டம் முதலியவற்றை ஆய்வு செய்து நேற்று முன்தினம் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து இழுவை கப்பல் மூலம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள சிறிய துறைமுகத்திற்கு மிதவை கப்பல் மூலம் இழுத்துவரப்பட்டது .

நேற்று மாலை கூடங்குளம் அணுமின் நிலைய துறைமுகத்தின் முகப்பில் வரும் பொழுது பாறை இடுக்கில் ஸ்டீம் ஜெனரேட்டர் உள்ள பார்ஜ் எனப்படும் மிதவை வரும் பொழுது இழுவை கப்பலுக்கும் மிதவைக்கும் இடையிலான கயிறு அறுந்து விட்டது.தலா 300 டன் எடை கொண்ட 600 டன் எடை கொண்ட ஸ்டீம் ஜெனரேட்டர் எனப்படும் அந்த நீராவிய உற்பத்தி செய்யும் இரண்டு இயந்திரங்களின் மிதவை கப்பல் பாறை இடுக்குகளில் சிக்கியதினால் அதனை இழுத்து வந்த இழுவை கப்பலின் கயிறு அறுந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மிதவைக் கப்பல் ஆனது 55 மீட்டர் நீளமும் 18 மீட்டர் அகலமும் கொண்டது. எனவே அகலமான இந்த மிதவை கப்பல் பாறை இடுக்கில் சிக்கியதினால் அதனை மீண்டும் இழுப்பதில் சிக்கல் ஏற்பட்டது .மேலும் கடலின் நீர்மட்டம் குறைந்ததினால் மிதவை கப்பல் ஒருபுறம் சாய்ந்த நிலையில் உள்ளது.

இதனால் மிதவையின் ஒரு பக்கம் சாய்ந்த நிலையில் இருப்பதினால் அதனை சரி செய்யும் பணிகளிலும் இதனை ஏற்றி வந்த ஒப்பந்தக்காரர்கள் பணியில் ஈடுபட்டனர்.இதற்காக தூத்துக்குடியில் இருந்து முத்துக்குளி வீரர்களும் அதேபோல் அப்பகுதியில் உள்ள மீனவர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

அணுமின் நிலையத்தின் சிறிய துறைமுக பகுதியில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்குள் பாறை இடுக்குகளில் சிக்கியுள்ள அந்த மிதவையானது கடலின் நீர்மட்டத்தின் உயர்வு மற்றும் காற்றின் வேகத்தை பொறுத்து மீண்டும் அது கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள அந்த சிறிய துறைமுகத்திற்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் மாலை வரை கடலில் நீர்மட்டம் போதிய அளவு உயராததினாலும் ,கடலில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதினால் தற்பொழுது பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன.இதற்கான வல்லுநர்கள் குழு பல்வேறு இடங்களில் இருந்து கூடங்குளம் வர உள்ளது. அதற்கான அனைத்து பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. அவர்கள் வந்த பின்பு தான் மீண்டும் பாறையில் சிக்கியுள்ள மிதவை கப்பலை மீட்கும் பணி தொடங்கும்.

ஏற்கனவே உக்கரைன் ரஷ்ய போரினால் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு வர வேண்டிய உதிரி பாகங்கள் மிகவும் காலம் தாமதமாகவே வந்து கொண்டிருக்கின்ற சூழ்நிலையில் தற்பொழுது தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து இழுவை கப்பலில் வந்த ஸ்டீம் ஜெனரேட்டர் எனப்படும் நீராவிய உற்பத்தி செய்யும் இயந்திரம் பாறை இடுக்குகளில் சிக்கி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here