ரூ.500க்கும் தடையா? பிரதமரின் திட்டம் தான் என்ன?

0
85
ம்

ரூபாய் நோட்டுகள் தொடர்பாக மத்திய அரசு பலமுறை பெரிய முடிவுகளை எடுத்துள்ளது. 2016ஆம் ஆண்டில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், சமீபத்தில் 2000 ரூபாய் நோட்டுகளைப் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக அரசு அறிவித்தது. இப்போது மீண்டும் ரூபாய் நோட்டு தொடர்பாக நிதியமைச்சகம் ஒரு பெரிய விஷயத்தை கூறியுள்ளது.


500 ரூபாய் நோட்டுகள் தொடர்பான விஷயம்தான் அது.ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, 2023 செப்டம்பர் 30 வரை நீங்கள் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றலாம். 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றுவதற்கான காலக்கெடு செப்டம்பர் 3 வரை உள்ளது என்றும், அதை நீட்டிக்கும் எந்த திட்டத்தையும் அரசு பரிசீலிக்கவில்லை என்றும் நிதி அமைச்சகம் மக்களவையில் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கறுப்புப் பணத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசு 500 ரூபாய் நோட்டையும் நிறுத்துமா என்று நிதியமைச்சகத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. தற்போது சந்தையில் ரூ. 500 நோட்டுதான் பெரிய மதிப்பு என்பதால் விரைவில் 500 ரூபாய் நோட்டுகளையும் அரசு தடை செய்யுமா என்ற அச்சம் மக்களிடையே உள்ளது. தற்போது, அத்தகைய திட்டம் எதுவும் பரிசீலிக்கப்படவில்லை என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. மக்களவையில் இதற்கான பதில் கிடைத்துள்ளது.

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என 2016ஆம் ஆண்டு முதல் முறையாக பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மோடி அரசு மேற்கொண்டது. அதன் பிறகு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். இப்போது 2000 ரூபாய் நோட்டை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெற அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அதன் பிறகு அரசாங்கம் மீண்டும் 1000 ரூபாய் நோட்டைக் கொண்டுவருமா என்ற கேள்வியும் மக்களிடையே எழுந்தது. இது குறித்தும், தற்போது அத்தகைய திட்டம் எதுவும் பரிசீலிக்கப்படவில்லை என்று நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here