அமலாக்கத்துறை இயக்குநராக சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவிக் காலத்தை செப்டம்பர் 15 ஆம் தேதி வரை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமலாக்கத் துறை இயக்குநராக உள்ள சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவிக் காலத்தை 3-வது முறையாக நீட்டித்தது சட்ட விரோதம் என்று அண்மையில் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. மேலும் இது தொடர்பான வழக்கில், சஞ்சய் குமார் மிஸ்ரா ஜூலை 31 ஆம் தேதி வரை மட்டுமே அந்த பதவியில் இருக்கலாம் எனவும் தெரிவித்து இருந்தது.
கடந்த 11ஆம் தேதி உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்து இருந்தது. இந்த நிலையில், அமலாக்கத்துறை இயக்குனர் சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவிக்காலத்தை நீட்டிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
சஞ்சய் குமார் மிஸ்ராவுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது சட்டவிரோதம் என உச்ச நீதிமன்ற கூறியிருந்த நிலையில், மீண்டும் அவருக்கு பணி நீட்டிப்பு கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனுத்தாக்கல் செய்து இருந்தது. இந்த மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 2018-ம் ஆண்டு முதன் முதலில் மத்திய அமலாக்கத்துறை இயக்குநராக எஸ்கே மிஸ்ரா நியமிக்கப்பட்டார். அவரது பதவி காலம் 2020-ம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் நிறைவடைந்தது. அப்போது அவருக்கு வயது 60. ஆனால் 2020-ம் ஆண்டு நவம்பர் 13-ந் தேதி மிஸ்ராவுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
2021-ல் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில், அமலாக்கத்துறை இயக்குநர் பதவிக் காலத்தை குறுகிய காலம் மட்டும்தான் நீட்டிக்க வேண்டும் என்றனர். சஞ்சய்குமார் மிஸ்ரா (எஸ்கே மிஸ்ரா) பதவிக் காலத்தை மீண்டும் நீட்டிக்கக் கூடாது என தெளிவான தீர்ப்பு தந்தது.
ஆனாலும் 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் மீண்டும் எஸ்கே மிஸ்ராவுக்கு ஓராண்டு பதவி நீட்டிப்பு கொடுத்தது உச்சநீதிமன்றம். மத்திய அரசின் இந்த நடவடிக்கை உச்சநீதிமன்றத்தை அதிருப்தி அடைய செய்தது. உச்சநீதிமன்றம் அப்போது, அமலாக்கத்துறை இயக்குனர் எஸ்.கே மிஸ்ரா செப். 15 ஆம் தேதி வரை பதவியில் நீடிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக வழ்க்கு விசாரணையின் போது, அமலாக்கத்துறையில் எஸ்.கே மிஸ்ரா மட்டுமே தகுதி வாயந்த நபரா என காட்டமாக கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், செப்டம்பர் 15 ஆம் தேதி நள்ளிரவு பதவிக் காலம் நிறைவு அடைந்ததாக கருதப்படும். அதன்பிறகு எக்காரணத்தை கொண்டும் நீட்டிக்கப்படாது” என்றும் தெரிவித்தது.