அமைச்சர் கயல்விழி

பட்டியலின அதிகாரிகள் பதவி இறக்கம் செய்யப்படுகிறார்கள், என்று அமைச்சரிடம் மனு கொடுத்து ஒரு ஆண்டு ஆன பிறகும், இந்த அநீதி நிறுத்தப்பட வில்லை, தமிழக அரசு இதை தடுத்து நிறுத்த முடியாதா என்று வி.சி.க எம்.பி ரவிக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.பட்டியலின அதிகாரிகள் பதவி இறக்கம் செய்யப்படுகிறார்கள், அமைச்சரிடம் மனு கொடுத்து ஒரு ஆண்டுக்கு பிறகும், இந்த அநீதி நிறுத்தப்பட வில்லை, தமிழக அரசு இதை தடுத்து நிறுத்த முடியாதா என்று வி.சி.க எம்.பி ரவிக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசு ஊழியர்களின் பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்குவதற்கு தமிழக அரசு கடைபிடித்து வந்த ரோஸ்டர் முறையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததைத் தொடர்ந்து, பட்டியலின அதிகாரிகள் பதவி இறக்கம் செய்யப்படுகிறார்கள், அமைச்சரிடம் மனு கொடுத்து ஒரு ஆண்டுக்கு பிறகும், இந்த அநீதி நிறுத்தப்பட வில்லை, தமிழக அரசு இதை தடுத்து நிறுத்த முடியாதா என்று வி.சி.க எம்.பி ரவிக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

ரவிக்குமார்

வி.சி.க பொதுச் செயலாளரும் விழுப்புரம் தொகுதி எம்.பி-யுமான ரவிக்குமார் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில், ‘பதவி இறக்கப்படும் எஸ்சி அரசு அதிகாரிகள்’ என்று பதிவிட்டிருப்பது தமிழக அரசை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளது. ரவிக்குமார் அந்த பதிவில் கூறியிருப்பதாவது: “பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு கடைபிடித்துவந்த ரோஸ்டர் முறையை எதிர்த்து ஓபிசி பிரிவைச் சேர்ந்த ஒருவர் உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் அளிக்கப்பட்ட உத்தரவைக் காரணமாகக் காட்டி எஸ்சி அரசு அதிகாரிகளின் பதவி உயர்வைப் பறித்து அவர்களைக் கீழிறக்கம் செய்கிறது தமிழ்நாடு அரசு. இதைத் தடுப்பதற்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ளதைப்போல சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் எனக் கடந்த ஆண்டு இதே நாளில் மாண்புமிகு அமைச்சர் கயல்விழி அவர்களிடம் மனு அளித்தேன். ஆனால் அந்த அநீதி இதுவரை நிறுத்தப்படவில்லை.

ரவிக்குமார் எம்.பி

வி.சி.க சார்பில் தலைவர் எழுச்சித் தமிழரும் நானும் தமிழ்நாடு அரசின் உயர் அதிகாரிகளிடத்தில் இதுகுறித்து விரிவாக எடுத்துரைத்தோம். மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கவனத்துக்கும் கொண்டு சென்றோம். இப்போதுகூட வேளாண் துறையில் 39 துணை இயக்குநர்கள் பதவி இறக்கம் செய்யப்படுகின்றனர் என்றும் அதில் 37 பேர் எஸ்சி வகுப்பினர் என்றும் அறிகிறேன். இப்படியே போனால் இனிமேல் எஸ்சி வகுப்பைச் சேர்ந்த ஒருத்தர் கூட உயர் பதவிக்கு வர முடியாது. இதைத் தமிழ்நாடு அரசு தடுக்க முடியாதா” என்று கேட்டுள்ளார்.மேலும், ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழியிடம் 25.07.2023 அன்று விழுப்புரத்தில் மனு அளித்த புகைப்படம் மற்றும் மனுவின் புகைப்பட நகலையும் ரவிக்குமார் பதிவிட்டுள்ளார்.

அதில், “பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்குவதற்கு இதுவரை தமிழ்நாடு அரசு கடைபிடித்துவந்த ரோஸ்டர் முறையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள ஆணையால் தற்போது ஆயிரக் கணக்கான எஸ்சி, எஸ்டி அரசு ஊழியர்கள் பதவி கீழிறக்கம் செய்யப்படுகின்றன. எஸ்சி, எஸ்டி பிரிவினரின் பதவியைப் பாதுகாக்க உடனடியாக அவசரச் சட்டம் ஒன்றை தமிழ்நாடு அரசு இயற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என்று கோரியுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here