- காரைக்குடி சங்கராபுரம் ஊராட்சி மன்ற தேர்தலில் ஊராட்சி மன்ற தலைவியாக உள்ள தேவியின் வெற்றி செல்லாது உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
தேவியின் வெற்றி செல்லாது என்றும் தேவியை எதிர்த்து போட்டியிட்ட பிரியதர்ஷினி என்பவரின் வெற்றி தான் செல்லும் என்ற விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை உறுதிப்படுத்தி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி அவரின் மனைவி தேவி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அதில் சங்கராபுரம் பஞ்சாயத்து தேர்தலில் (2019) நடைபெற்றது 2020 ஜனவரி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது முதலில் 62 வாக்குகள் வித்தியாசத்தில் நான் (தேவி) வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அதற்கான சான்றிதழும் எனக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில் சிறிது நேரத்தில் என்னை எதிர்த்து போட்டியிட்ட பிரியதர்ஷினி வெற்றி பெற்றதாகவும் அவருக்கும் அதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டதாகவும் தெரியவந்தது.
இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்புள்ளது. எனவே தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்து நான் வெற்றி பெற்றதாக அறிவிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதனை விசாரணை செய்த நீதிமன்றங்கள் தேவியின் வெற்றி செல்லும் என அறிவித்தது மேலும் பிரியதர்ஷினி விசாரணை நீதிமன்றத்தை நாடி தனது தேர்தல் வழக்கை நடத்தி உரிய பரிகாரம் தேடிக் கொள்ளலாம் எனவும் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது.
நீதிமன்ற உத்தரவின் படி பிரியதர்ஷினி சிவகங்கை மாவட்ட விசாரணை நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்தார் இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் தேவியின் வெற்றி செல்லாது பிரியதர்ஷினி வெற்றி தான் செல்லும் என கடந்த மாதம் உத்தரவு பிறப்பித்தது.
விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து தனது வெற்றியை உறுதிப்படுத்த வேண்டும் என தேவி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன் விசாரணைக்கு வந்தது.அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் பாஸ்கரன் ஆஜராகி.

கொஞ்சம் இதையும் படிங்க : https://www.thenewscollect.com/tiruvallur-district-workers-strike-at-kattupally-sea-water-desalination-plant/
விசாரணை நீதிமன்றம் மிகச் சரியாக விசாரணை செய்து பிரியதர்ஷினி வெற்றியை உறுதிப்படுத்தி உத்தரவு பிறப்பித்தது குறிப்பாக தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது கூட்டு தொகையில்தான் வேறுபாடு வந்தது மீண்டும் கூட்டி வாக்குகளை எண்ணும் போது பிரியதர்ஷினி வெற்றி உறுதி செய்யப்பட்டது எனவே கீழமே நீதிமன்றத்தின் உத்தரவை உறுதிப்படுத்த வேண்டும் தேவியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார்.
அரசு தரப்பின் வாதத்தை பதிவு செய்த நீதிபதி தேவியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உள்ளாட்சி தேர்தலில் சங்கராபுரம் பஞ்சாயத்து தலைவியாக பிரியதர்ஷினி வெற்றியை உறுதி செய்து உத்தரவு பிறப்பித்தார்.