ஊழியர்படித்த அரசு பள்ளிக்கு 4லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கி சர்ப்ரைஸ் கொடுத்த சிங்கப்பூர் தொழிலதிபர்

0
97
சிங்கப்பூர் தொழிலதிபர்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகேயுள்ள சின்ன அம்மங்குடி பகுதியை சேர்ந்த ஜெயபால் அமுதா இவர்களின் மகன் ஜெயபிரகாஷ் இவர் சிங்கப்பூரில் உள்ள  ஆக்டிவ் ஃபயர் புரடெக்சன் சிஸ்டம் பிரைவேட் லிமிடெட் தனியார் நிறுவனத்தில் 7 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் ஜெயா பிரகாசுக்கு திருமணம் செய்ய அவரது பெற்றோர்கள் முடிவு செய்தனர். இதையடுத்து ஜெயபிரகாஷ் தனது திருமணத்திற்கு வருமாறு அவரது முதலாலியும் தொழில் அதிபருமானடொமினிக் ஆங் பாவ் லெங்கிற்கு அழைப்பிதழ் கொடுத்தார்.

இதையடுத்து ஜெயபிரகாசுக்கு அன்புகனி என்பவருடன் ஊரணிபுரம் தனியார் மஹாலில் திருமணம் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொள்ள தமிழகத்துக்கு வந்த டொமினிக் ஆங் பாவ் லெங் மற்றும் அவரது குடும்பத்தினர் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டை அணிந்தார். பின்னர் அவருக்கு ஊரின் எல்லையில் இருந்து சாரட் குதிரை வண்டியில் அமர வைத்து செண்டை மேளம் முழங்க ஜெயபிரகாஷின் உறவினர்கள் தடபுடலாக வரவேற்பு அளித்தனர்.

திருமணம் முடிந்த பிறகு மணமக்களை வாழ்த்தி விட்டு அங்கு வந்திருந்த ஜெயபிரகாஷின் உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு பந்தியில் அமர்ந்து அசைவ உணவுகளை சாப்பிட்டனர். பின்னர் ஜெயபிரகாஷ் படித்த சின்ன அம்மங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு சென்று ஜெயபிரகாசுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் அங்கு பயின்று வரும் 65 மாணவர்களுக்கு நான்கு லட்சம் மதிப்பீட்டில் லேப்டாப், ப்ரொஜெக்டர், ஸ்கிரீன் ப்ளே, பள்ளி மாணவர்களுக்கு தேவையான பேக் நோட்டு புத்தகங்கள் பேனாக்கள் வழங்கி பள்ளி மாணவர்களுடன் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்துக் கொண்டனர்.

தனது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியரின் திருமணத்திற்கு வந்த சிங்கப்பூர் தொழிலதிபர் நலத்திட்ட உதவிகள் வழங்கியதை பொதுமக்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here