ரயில் பயணிகளுக்கு பயனளிக்கும் வகையில் தெற்கு ரயில்வே நிர்வாகம் பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களின் வாயிலாக ரயில்வே தொடர்பான அறிவிப்புகள், அறிக்கைகளைப் பதிவிட்டு வருகிறது.
இந்த சமூக வலைத்தள பக்கங்களை இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடர்ந்து பயனடைந்து வருகின்றனர் .
இந்த நிலையில் தெற்கு ரெயில்வேயின் பேஸ்புக் பக்கம் இன்று மர்ம நபர்களால் முடக்கப்பட்டுள்ளது. அதில் உள்ள முகப்பு புகைப்படத்தை மாற்றி, கேலிச்சித்திரம் வைக்கப்பட்டுள்ளது.
முடக்கப்பட்ட பேஸ்புக் பக்கத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் தொழில்நுட்ப வல்லுநர் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
அதே சமயம் தெற்கு ரெயில்வேயின் இணையதளம், டிவிட்டர் கணக்கு ஆகியவை வழக்கம்போல் இயங்கி வருவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.