இந்திய மருத்துவ சங்க தமிழ்நாடு கிளையின் சார்பில் வடக்கு மண்டல விளையாட்டு போட்டிகள் விழுப்புரம் இ.எஸ் லார்ட்ஸ் இண்டர்நேஷனல் பள்ளி வளாகத்தில் 30.7.2023 அன்று நடைபெற்றது.இதில் விழுப்புரம் , திருவண்ணாமலை,கள்ளக்குறிச்சி,செங்கல்பட்டு தாம்பரம் ,வேலூர் ,காஞ்சிபுரம்,அம்பத்தூர்,ஆவடி வில்லிவாக்கம், திருவெற்றியூர், ஆரணி செய்யாறு சுமார் 18 சங்கத்தின் கிளைகளில் இருந்து சுமார் 150முதல்200 விளையாட்டு வீரர்கள் ,வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.இதில் தடகளம் ,இறகு பந்து, டேபிள் டென்னிஸ், செஸ், கேரம்,கைப்பந்து, 200மீட்டர்,400மீட்டர்,1500மீட்டர் ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், வட்டெறிதல், ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன.முன்னதாக 5 கிலோமீட்டர் தூரத்திற்கு மாரத்தான் போட்டி நடைபெற்றது.இப்போட்டியை விழுப்புரம் மாவட்ட சட்ட மன்ற உறுப்பினர் டாக்டர் லக்ஷ்மணன் அவர்கள் தொடங்கி வைத்தார்.தொடர்ந்து 45 வயதிற்கு கீழ், 45 வயதிற்கு மேல், 60வயதுக்கு மேல், பிரிக்கப்பட்டு ஆண் ,பெண் தனி பிரிவுகளாகவும் ,கலப்பு இரட்டையர் போட்டிகளும் நடத்தப்பட்டன.
வெற்றி பெற்ற வீரர்களுக்கு சங்கத்தின்
மாநில விளையாட்டு துறை தலைவர் மரு செந்தில்குமார், மற்றும் மாநில லீகள் விங் சேர்மன் மரு குமார்,
மாநில முன்னாள் பிபிஎல்எஸ் சேர்மன் மரு நேரு, ஆகியோர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மருத்துவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்கள்.