ஸ்ரீ சங்கரநாராயண சுவாமி சமேத கோமதி அம்பாள் கோயில் – இன்று தேரோட்டம்.!

0
91
ஸ்ரீ சங்கரநாராயண சுவாமி சமேத கோமதி அம்பாள்

ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம்:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் ஸ்ரீ சங்கரநாராயண சுவாமி சமேத கோமதி அம்பாள் கோயில் அமைந்துள்ளது. அந்தக் கோயிலின் ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் நடைபெற்றது.

வீதி உலா:
இந்த திருவிழாவிற்காக கடந்த 21 ஆம் தேதியே கோயிலில் கொடியேற்றம் நடைபெற்று தினமும் சிறப்பு பூஜை நடைபெற்று வந்தது. அதன் தொடர்ச்சியாக இன்று 9ஆம் நாள் கோமதி அம்பாள் திருத்தேரில் வீற்றிருக்க நான்கு ரத வீதிகளிலும் வீதி உலா நடைபெற்றது.

சாமி தரிசனம்:
பஞ்ச வாத்தியங்கள் முன்னே இசைக்க தேரை பக்தர்கள் வடம் பிடித்து தடிப்போட்டு இழுத்துச் சென்றனர். இந்த திருவிழாவை காண தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட மக்கள் மற்றும் உள்ளூர் மக்கள் என ஏராளமானோர் கண்டு களிக்க வந்து சாமி தரிசனம் செய்து சென்றனர்.

தவசுக்கட்சி:
அதன் தொடர்ச்சியாக திருவிழாவில் முக்கிய நிகழ்வான தவசு கட்சி விழா வருகிற 31ஆம் தேதி நடைபெறுகிறது. அந்த நிகழ்வு மாலை 5 மணிக்கு நடைபெறும் என கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here