ஸ்டாலின் கையில் எடுக்கும் 3 அசைன்மெண்டுகள்! நிர்வாகிகளுக்கு முக்கியமான டாஸ்க்குகள்!

0
86
முதல்வர் ஸ்டாலின்

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக வாக்குச்சாவடி பணியாளர்களுக்கும், முகவர்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் 3 முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

ஆளும் திமுக கட்சி 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறது. வருகின்றன நாடாளுமன்ற தேர்தலிலும் 38-39 இடங்களை வெல்ல வேண்டும் என்று இலக்கு நிர்ணயம் செய்து திமுக பணிகளை செய்து வருகிறது. நாடாளுமன்றத் தேர்தல் களத்தின் முதல்கட்டமாக, திருச்சியில்,டெல்டா மாவட்டங்களின் வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சிப் பாசறைக் கூட்டம் திமுக சார்பாக நேற்று நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் முக்கியமான சில கருத்துக்களை தெரிவித்தார்.

தமிழை – தமிழினத்தை – தமிழ்நாட்டு மக்களை – இந்திய ஜனநாயகத்தைக் காப்பதற்கான களம் தயாராகிவிட்டது.
திருப்புமுனை தரும் தீரர்கள் கோட்டையான திருச்சியில், வாக்குச்சாவடி வீரர்களிடம் அவர்களின் கடமை இன்றைய காலத்தின் தேவை என்பதை எடுத்துரைத்தேன். வெறுப்பையும் பிரிவினையையும் மக்களிடையே விதைத்தவர்கள் இப்போது #INDIA-வின் மக்களின் ஒற்றுமையைக் கண்டு அஞ்சி நடுங்குகிறார்கள். களம் காணுவோம்! களமாடுவோம்! நாற்பதும் நமதே! நாடும் நமதே!, என்று கூட்டத்தில் பேசினார்.

அதோடு, நாடாளுமன்றத் தேர்தல் களம் காண, மாநிலம் முழுவதும் உள்ள வாக்குச்சாவடி பொறுப்பாளர்களை மண்டல வாரியாகச் சந்திக்கத் திட்டம் வைத்தே இந்த கூட்டம் நடைபெற்றது.
கழக வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு தேர்தலுக்கு முன்பு செய்ய வேண்டிய பணிகள் குறித்தும், தேர்தல் நாளன்று ஆற்ற வேண்டிய கடமைகள் குறித்தும் இப்பாசறைக் கூட்டத்தில் பயிற்சி அளிக்கப்படும். இக்கூட்டத்தில் பெறும் பயிற்சியைக் கொண்டு கழகத்தின் வெற்றிக்கு கண்துஞ்சாமல் கடமையாற்றிட வேண்டும்.

‘இந்தியா’வின் வெற்றி நம் கையில் என்பதில் நம்மைவிடவும் உறுதியாக இருக்கும் அரசியல் எதிரிகள், அவதூறுகளைப் பரப்பி, நெருக்கடிகளை உருவாக்கிட தொடர்ச்சியான செயல் திட்டங்களை வகுத்து வைத்திருக்கிறார்கள். எத்தகைய சவால்களையும் வென்று சாதனை படைத்திடும் ஆற்றல் கழக உடன்பிறப்புகளுக்கு உண்டு.

உரலுக்குள் நெல்மணிகள் உலக்கைபட்டு உமி வேறாய், அரிசி வேறாய் பிரிவது போல்’ என்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்,
சங்கத்தமிழ் நூலில் கூறியுள்ளார். அதேபோல, அரசியல் எதிரிகளை உமியென ஊதித் தள்ளி, அரிசியெனும் வெற்றியை அள்ளிக் குவிக்கலாம். டெல்டாவில் அதற்கான முதல் களம் அமைந்துள்ளது.
மற்ற மண்டலங்களிலும் விரைவில் உங்கள் அன்பு முகம் காண்பேன். ‘நாற்பதும் நமதே-நாடும் நமதே, என்று முதல்வர் ஸ்டாலின் இது தொடர்பாக வெளியிட்டு இருந்த அறிக்கையிலும் கூறி இருந்தார்.
இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக வாக்குவாசவடி பணியாளர்களுக்கு, முகவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி முதலில் உங்கள் பகுதியில் வாக்குசாவடி முகாம் நமக்கு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அது இல்லையென்றால் உடனே அமைக்க வேண்டும்.

அதில் வாக்காளர்கள் பட்டியலை சரி செய்து லிஸ்ட் எடுத்துக்கொள்ளுங்கள். தேர்தலுக்கு முன் அல்ல. இப்போதே வாக்குசாவடி வாரியாக அந்த லிஸ்டில் உள்ளவர்களை சந்தியுங்கள். அவர்களிடம் நம்முடைய சாதனைகளை சொல்லுங்கள்.
நாம் கொண்டு வந்த திட்டங்களை சொல்லுங்கள். அதன்பின் மூன்றாவதாக அவர்கள் தேர்தல் சமயத்தில் வாக்களிக்க வருவதை உறுதி செய்திடுங்கள் என்று முதல்வர் ஸ்டாலின் திமுக நிர்வாகிகளுக்கு 3 முக்கியமான டாஸ்க்குகளை கொடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here