2000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற அடையாள அட்டை எதுவும் தேவையில்லை என பாரத ஸ்டேட் வங்கி கூறியுள்ளது.
சமீபத்தில் வெளியான ஒரு அறிவிப்பு இந்தியாவில் தற்போது 2000 ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கி தடை செய்துள்ளது. இவற்றை புழக்கத்தில் இருந்து அகற்றுவதாக ரிசர்வ் வங்கி சனிக்கிழமை செய்தி வெளியிட்டது. இந்த நிலையில், பொதுமக்கள் தாங்கள் வைத்துள்ள 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றி கொள்ளலாம் எனவும் அதற்கான கால அவகாசமும் வழங்கியுள்ளது.
சாமானிய மக்கள் இந்த நோட்டுகளை மாற்றும் நடைமுறைக்கு ஏதுவாக எஸ்பிஐ பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில், தற்போது எஸ்பிஐ வங்கியானது 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, ரூபாய் நோட்டை மாற்றும்போது படிவம் மற்றும் அடையாளச் சான்று எதுவும் சமர்பிக்க தேவையில்லை என்று தனது அனைத்து கிளைகளுக்கும் அறிவித்துள்ளது. இது உடனடியாக நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமையன்று புழக்கத்தில் இருந்து ரிசர்வ் வங்கியால் திரும்பப் பெற்ற ரூ.2000 அனைத்து பொதுமக்களும் ஒரே நேரத்தில் ரூ.20,000 வரை எந்தவொரு கோரிக்கை சீட்டும் பெறாமல் மாற்றி கொள்ள அனுமதிக்கப்படும்என்று மே 20 தேதியிட்ட சுற்றறிக்கையில் வங்கி தெரிவித்துள்ளது. மேலும், அடையாளச் சான்றுகளும் தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளது.
இது வங்கியில் பணத்தை செலுத்தி கணக்கிலோ அல்லது கையிலோ பணம் வாங்குவதற்கு சாமானிய மக்களுக்கு சாதாரணமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.