சென்னை: பாஜக தலைவர் அண்ணாமலை தனது யாத்திரைக்கு இடையே டெல்லி செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் திமுக மாணவரணி தலைவர் ராஜிவ் காந்தி இதை விமர்சனம் செய்துள்ளார். தேசிய அளவில் பாஜக மிகப்பெரிய கட்சியாக உள்ளது. ஏன் உலக அளவில் அதிக தொண்டர்கள் கொண்ட கட்சியில் பாஜக ஒன்றாக உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் என்னவோ பாஜகவிற்கு பெரிய ஆதரவு இல்லை. கடந்த லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக சார்பாக ஒருவர் கூட எம்.பியாக தேர்வாகவில்லை. அந்த அளவிற்கு பாஜகவிற்கு தமிழ்நாட்டில் பலம் இல்லாத சூழ்நிலை உள்ளது. பாஜகவிற்கு சில மாவட்டங்களில் சரியான பூத் கமிட்டி கூட இல்லாத நிலை உள்ளது. பூத் கமிட்டியில் ஆள் போடுவதற்கு கூட உறுப்பினர்கள் இல்லாத சூழ்நிலை உள்ளது.
இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் பாஜகவை வலிமைப்படுத்தும் திட்டத்தில் இறங்கி உள்ளார் அண்ணாமலை.
அண்ணாமலை
தமிழ்நாட்டில் 2024 லோக்சபா தேர்தலுக்கான பிரச்சாரம் அதிகாரப்பூர்வமற்ற முறையில் தொடங்கிவிட்டது என்றுதான் கூற வேண்டும். சமீபத்தில் தமிழ்நாட்டிற்கு வந்த பாஜக தேசிய தலைவர்
ஜே.பி நட்டா கிட்டத்தட்ட நாடாளுமன்ற தேர்தலுக்கான பாஜக பிரச்சாரத்தை தொடங்கி வைத்துவிட்டார் என்றுதான் கூறப்பட்டது. இந்த நிலையில்தான் தற்போது பாஜக தலைவர் அண்ணாமலை
தமிழ்நாட்டில் நடைபயணம் மேற்கொண்டுள்ளார். தமிழ்நாடு பாஜக சார்பில் ‘என் மண் என் மக்கள் யாத்திரை’ கடந்த வெள்ளிக்கிழமை துவங்கியது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 168 நாட்கள் யாத்திரை மேற்கொள்ள உள்ளார். தமிழ்நாட்டில் பாஜகவை வலுப்படுத்தும் விதமாக அதன் தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டு உள்ளார். ராமேஸ்வரம் முதல் சென்னை வரை பாதயாத்திரை செல்கிறார் அண்ணாமலை.
மிக நீண்ட அரசியல் யாத்திரையாக இது இருக்க போகிறது.
பாரத் ஜோடோ யாத்திரை காங்கிரஸ் கட்சியை வலிமைபடுத்தியது போல இந்த யாத்திரை பாஜகவை தமிழ்நாட்டில் வலிமைப்படுத்தும் என்று அண்ணாமலை நம்பிக்கை கொண்டுள்ளார். அண்ணாமலை செல்லும் வழியில் அவர் ஓய்வு எடுக்க இந்த கேரவன் அமைக்கப்பட்டு உள்ளது. அதேபோல் இடை இடையே அவர் உறங்க, சாப்பிட இந்த கேரவன் அமைக்கப்பட்டு உள்ளது. காவி நிறத்தில் பாஜகவின் சாதனைகளை பட்டியலிட்டு கேரவன் அமைக்கப்பட்டு உள்ளது. பிரதமர் மோடி வேட்டியுடன் இருக்கும் புகைப்படம் இந்த கேரவன் கதவில் அமைக்கப்பட்டு உள்ளது. பல நவீன வசதிகளுடன் இந்த கேரவனின் உட்பகுதி வடிவமைக்கப்பட்டு உள்ளது. மெத்தை படுக்கை , ஏசி, மைக்ரோவேவ் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.
இதன் உள்ளேயே சமைத்துக்கொள்ள வேண்டும். டெல்லி பயணம்: இந்த நடைப்பயணத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை தற்போது மதுரைக்கு சென்றுள்ளார். ஒரு வாரம் பயணம் முடிந்த நிலையில் சிவகங்கை முடிந்து தற்போது மதுரைக்கு அண்ணாமலை வந்துள்ளார். அங்கே பெரிய மாநாட்டை நடத்த அண்ணாமலை திட்டமிட்டு உள்ளார்.
மிகப்பெரிய பொதுக்கூட்டம் போல இந்த கூட்டம் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்தான் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று டெல்லி செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது. பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா அழைத்ததால் இன்று டெல்லி செல்கிறார். அண்ணாமலை மதுரை மாவட்டத்தில் நடைப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில் பயணத்தை பாதியில் நிறுத்திவிட்டு டெல்லி செல்கிறார். பயணத்தை தற்காலிமாக நிறுத்திவிட்டு அவர் டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாஜக-அதிமுக தலைவர்கள் இடையே பிரச்சனை உள்ள நிலையில் அண்ணாமலை டெல்லி பயணம் கவனம் பெற்றுள்ளது. இந்த நிலையில் திமுக மாணவரணி தலைவர் ராஜிவ் காந்தி இதை விமர்சனம் செய்துள்ளார். பாவம் பாவ யாத்திரையை பாதியிலேயே முடித்துவிட்டு கிளம்புகிராறாம் டெல்லிக்கு! பாவம்.! என்று அண்ணாமலையின் டெல்லி பயணத்தை ராஜிவ் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.