பொள்ளாச்சி அடுத்த தொண்டாமுத்தூர் ஆதிதிராவிடர் நலத்துறை அரசினர் மாணவர் விடுதியில் மாணவர்கள் மயக்கமடைந்த விவகாரம் விடுதி காப்பாளரை மாற்ற கோரி போராட்டம்சமரச முயற்சியில் ஈடுபட்ட அதிகாரிகள்.
பொள்ளாச்சி அடுத்த தொண்டாமுத்தூர் ஆதிதிராவிடர் நலத்துறை அரசினர் மாணவர் விடுதியில் உணவு உட்கொண்ட மாணவர்களின் ஐவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.மாணவர்களின் உடல்நிலை அக்கறையின்றி செயல்பட்டதற்காக ஆதிதிராவிடர் விடுதியில் உள்ள மாணவர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த ஆதிதிராவிடர் நலத்துறை விடுதியில் சுத்தமான குடிநீர்,தரமான உணவு உள்ளிட்டவை சரியான விதத்தில் வழங்கப்படுவதில்லை எனவும்,இது குறித்து கூறினால் தரக்குறைவாக மாணவர்கள் நடத்தப்படுவதாகவும், மேலும் காப்பாளரின் கழிவறையை சுத்தம் செய்ய செல்வதாகவும் அங்கு படிக்கும் மாணவர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை விடுதி காப்பாளரான பழனிச்சாமி என்பவர் மீது கூறியுள்ளனர்.
மேலும் விடுதி காப்பாளரை மாற்றக்கோரி அங்குள்ள மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கலைந்து சென்றனர்.