தஞ்சையில் கரும்பு விவசாயிகள் போராட்டம் 1 டன்னுக்கு ஐந்தாயிரம்.

0
93
விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் பயிரிடப்படும் விவசாய பயிர்களில் நெல்,மணிலா, கம்பு, கேழ்வரகு,கரும்பு போன்றவை மிக முக்கியமானவை ஆகும். இவை அனைத்தும் நம்முடைய அன்றாட உணவு தேவைகளில் ஏதாவது ஒன்றை பூர்த்தி செய்து கொண்டே இருக்கும். ஆனால் இதை உற்பத்தி செய்வது எவ்வளவு சிரமம் என்பதை யாரும் அறிந்து கொள்வதில்லை.

அரசாங்கமும் விவசாயிகளை கண்டுகொள்ளாமல் இருக்கும் நிலைதான் தொடர்ந்து இருந்து வருவதாக விவசாய சங்கங்களும், விவசாயிகளும் குற்றம் சாட்டுகின்றனர். நம்முடைய உணவு தேவைகளை முழுவதுமாக பூர்த்தி செய்யக் கூடியவர்கள் விவசாயிகள் தான் என்பதை நாம் உணர வேண்டிய அவசியம் இருக்கிறது. அந்த வகையில் உணவு உற்பத்தி என்பது கடினமான ஒரு வேலையாக இருந்து வந்தாலும் கூட அவற்றை வெளி காட்டிக் கொள்ளாமல் விவசாயிகள் இலகுவாக செய்து வருகிறார்கள். இந்த வகையில் பொருளாதார நெருக்கடியை சரி செய்யவும், உணவு தேவையை பூர்த்தி செய்யவும் ஒவ்வொரு விதமான பயிர்களை விவசாயம் செய்கின்றனர் விவசாயிகள்.

அப்படிப்பட்ட பயிர்களில் ஒன்றுதான் கரும்பு பயிர். பத்து மாத காலம் அந்த கரும்பு பயிரை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். பராமரிக்க வேண்டும். அதற்காக உரமிடுதல் போன்ற பல்வேறு பணிகளை செய்து கொண்டே இருக்க வேண்டும். அப்படி செய்து முடிக்கும் நிலையில் கூட கரும்பு பிழித்திறன் குறைவாக உள்ளது என்று சர்க்கரை ஆலைகள் குறைவான பணத்தை கொடுத்து விடுகின்றனர். தற்போது வழங்கப்படும் தொகை கூட பெரிய அளவு லாபகரமானதாக விவசாயிகள் என்ன வில்லை எனவே தற்போது கரும்புக்கு ஒரு டன் 5 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்கிற முழக்கத்தை முன்னெடுத்திருக்கிறார்கள் விவசாயிகள்.

அந்த வகையில் கரும்பு டன் ஒன்றுக்கு 5 ஆயிரம் ரூபாய் மத்திய அரசு விலை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் கரும்பினை கைகளில் ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.பெட்ரோல் டீசல், சமையல் சிலிண்டர் விலை, கரும்பு வெட்டுக் கூலி இரண்டு மடங்கு விலை உயர்ந்து உள்ள நிலையில், மத்திய அரசு கடந்த 5 ஆண்டுகளில் கரும்பு டன் ஒன்றுக்கு 161 ரூபாய் மட்டுமே உயர்ந்துள்ளதாக குற்றஞ்சாட்டியும், டன் ஒன்றுக்கு மத்திய அரசு 5 ஆயிரம் விலை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியும், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் கரும்பை கைகளில் ஏந்தியபடி தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில செயலாளர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினார்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here