சந்தேக மரணம் பத்தாம் வகுப்பு பள்ளி மாணவி உயிரிழப்பு போ …

KARAL MARX
2 Min Read
நிரஞ்சனா

விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் அருகே உள்ள சுந்தரி பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோலியனூரான், மனைவி முத்தம்மாள். இவர்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் ஒரு பெண் பிள்ளை. கோலியனூரான் உடல் நல கோளாறு காரணமாக ஏற்கனவே இறந்து விட்டார் இவர்களுக்கு மூன்றாவது குழந்தை நிரஞ்சனா.

- Advertisement -
Ad imageAd image

நிரஞ்சனா விழுப்புரத்தில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த மாதம் 30 ஆம் தேதி நிரஞ்சனாவிற்கு உடல் நல கோளாறு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெற்று வந்தார். நிலைமை மோசமாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த நான்காம் தேதி அனுமதிக்கப்பட்டார். நிரஞ்சனாவிற்கு தொடர்ந்து ரத்தப்போக்கு நீடித்து வந்த நிலையில் அவரை சோதித்த மறுத்தவர்கள் விஷக்கடியாக இருக்கலாம், அல்லது சிறுநீரகப் பிரச்சினையாக இருக்கலாம், அல்லது நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்கிற சந்தேகத்தையே பெற்றோர்கள், உறவினர்களிடம் தெரிவித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று இரவு எட்டு மணி அளவில் நிரஞ்சனா உயிரிழந்து விட்டார் உடலை பெற்றுக் கொண்ட உறவினர்கள் சொந்த ஊர் சுந்தரி பாளையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர் உடலில் ஏற்பட்டுள்ள பல மாற்றங்கள் மற்றும் தொடர் ரத்தப்போக்கு ஆகியவற்றின் அடிப்படையில் உறவினர்களுக்கு ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் வளவனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் காவல்துறையினர் நிரஞ்சனாவின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக உறுதி செய்து சந்தேக மரணம் வழக்கில் வழக்கு பதிவு செய்துள்ளனர் அதனைத் தொடர்ந்து நிரஞ்சனா உடலை கைப்பற்றிய வளவனூர் போலீசார் உடல் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

நிரஞ்சனா உயிரிழப்பிற்கு மருத்துவர்கள் சொன்ன காரணங்கள் உண்மையா? என்பது அவர்கள் உறவினர்கள் மத்தியில் ஏற்பட்ட சந்தேகமே மீண்டும் புகார் அளிக்க தொடங்கினர் . தொடர் ரத்தப் போக்கிற்கு பாலியல் ரீதியாக ஏதாவது துன்புறுத்தல் இருக்குமா என்கிற சந்தேகம் உறவினர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.‌‌உயிரிழப்பிற்கு இதுதான் காரணமா? அல்லது பாலியல் ரீதியாக நிரஞ்சனா பாதிக்கப்பட்டு இருப்பாரா? என்கிற கோணத்தில் போலீசார் விசாரணையை துவங்கி உள்ளனர்.

Share This Article
Leave a review