தமிழ்நாடு பாஜகவிற்கும் அதிமுகவிற்கும் சுமுகமான உறவு இல்லை.! இதனால் தான் டெல்லி பயணமா.?

0
99
அண்ணாமலை

சென்னை: பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி செல்வதற்கு முன் அதிமுக மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அதிமுக பாஜக இடையிலான மோதல் மீண்டும் உச்சம் அடைந்துள்ளது. டெல்லி பாஜகவோடு அதிமுக தலைவர்கள் நட்பாகவே உள்ளனர். ஆனால் தமிழ்நாடு பாஜக தலைவர்களுடன் அதிமுகவிற்கு அவ்வளவு சுமுகமான உறவு இல்லை.

முக்கியமாக அண்ணாமலை – எடப்பாடி இடையே அவ்வளவு நட்பான உறவு இல்லை. இந்த நிலையில்தான் தனது நடைபயண யாத்திரைக்கு இடையே பேட்டி அளித்த அண்ணாமலை,
ஓ பன்னீர்செல்வத்தை நாங்கள் புறக்கணிக்கவில்லை. என்டிஏ கூட்டணி குறித்து முடிவு செய்வோம். அவர் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக பல விஷயங்களை செய்துள்ளார். தமிழ்நாட்டில் இருக்கவே நான் விரும்புகிறேன். தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வர வேண்டும். அதற்குத்தான் பாஜகவில் இணைந்தேன் . கட்சியின் தொண்டனாக தலைமை சொல்வதை கேட்பேன். அவர்கள் சொல்வதை கேட்டு அவர்களின் வெற்றிக்கு பாடுபடுவேன். டெல்லி போவதில், அங்கே பதவி பெறுவதில் எனக்கு விருப்பம் இல்லை. அதனால் லோக்சபா தேர்தலில் போட்டியிட மாட்டேன். தமிழ்நாட்டில்தான் நான் அரசியல் செய்வேன், என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறி உள்ளார்.

அண்ணாமலை ஜெயக்குமார்

விமர்சனம்:

அண்ணாமலையின் இந்த பேட்டியை எடப்பாடி விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. ஓ பன்னீர்செல்வம் பற்றி அண்ணாமலை இப்படி பேசி இருக்க கூடாது. அவர் எல்லை மீறிவிட்டார் என்ற கோபத்தில் இருக்கிறாராம். இதோடு அண்ணாமலை ஓ பன்னீர்செல்வத்திடம் போனில் பேசியதாகவும் கூறப்படுகிறது.

ஜெயக்குமார் விமர்சனம்:

அண்ணாமலையை விமர்சனம் செய்த ஜெயக்குமார், அதிமுகவினரை விமர்சிப்பதை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நிறுத்திக்கொள்ள வேண்டும் இல்லாவிட்டால் எதிர் விமர்சனங்களை சந்திக்க நேரிடும், “அதிமுகவை ‘தொட்டார் கெட்டார்’ என்பது அண்ணாமலைக்கே தெரியும். அதிமுகவின் தொண்டனையோ, தலைவரையோ விமர்சித்தால், எதிர்வினையை சந்திக்க நேரிடும்; அந்நிலைக்கு அவர் செல்லமாட்டார் என நம்புகிறோம். அந்த நம்பிக்கையை அவர்தான் காப்பாற்ற வேண்டும், என்று ஜெயக்குமார் கூறி உள்ளார்.

செல்லூர் ராஜு

செல்லூர் ராஜு:

இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வைத்த விமர்சனத்தில், மோடி ஜிக்கு எங்க தலைவரோட அருமை தெரியுது, அண்ணாமலைக்கு தெரியலனா நாங்க என்ன சொல்றது. அரசியல் கத்துக்குட்டிக்கு நாங்கள் பதில் சொல்லத் தேவையில்லை. அரசியலில் அண்ணாமலை கத்துக்குட்டி எங்கள் மீது துரும்பை வீசினால் மீண்டும் நாங்கள் இரும்பை வீசுவோம், என்று செல்லூர் ராஜு விமர்சனம் வைத்துள்ளார். இதற்கு அண்ணாமலை அளித்த பதிலில், விஞ்ஞானி செல்லூர் ராஜு கெல்லாம் பதில் சொல்லி என்னோட தரத்தை தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை , என்று கூறி இருந்தார். இந்த நிலையில்தான் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று டெல்லி செல்வதாக தகவல் வெளியாகி உள்ளார். பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா அழைத்ததால் இன்று டெல்லி செல்கிறார். அண்ணாமலை மதுரை மாவட்டத்தில் நடைப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில் பயணத்தை பாதியில் நிறுத்திவிட்டு டெல்லி செல்கிறார்.

ஜே.பி நட்டா

பயணத்தை தற்காலிமாக நிறுத்திவிட்டு அவர் டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாஜக-அதிமுக தலைவர்கள் இடையே பிரச்சனை உள்ள நிலையில் அண்ணாமலை டெல்லி பயணம் கவனம் பெற்றுள்ளது. அதிமுக பிரச்சனைக்கு இடையே அண்ணாமலை டெல்லி செல்ல உள்ளார். இந்த நிலையில் டெல்லி செல்லும் முன் மீண்டும் மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூவை அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். அதில், செல்லூர் ராஜு குறித்த என்னுடைய கருத்தில் மாற்றமில்லை. செல்லூர் ராஜு குறித்து பேசி என்னுடைய தரத்தை குறைத்துக் கொள்ளப் போவதில்லை. அவர் குறித்து நான் சொன்ன கருத்தில் இருந்து மாற மாட்டேன். 10,000 முறை கேட்டாலும் ஒரே பதில்தான் என்று பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம் வைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here