நீட் தேர்வுக்கு எதிராக நான் கையெழுத்திட மாட்டேன் தமிழக ஆளுநர். கல்வி பொதுப்பட்டியலில் உள்ளது கிருஷ்ணசாமி.

0
116
கிருஷ்ணசாமி

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக அதிகமாக பேசப்பட்டு பிரச்சனைகளில் நீட் தேர்வு ஒன்று என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். அது மட்டும் அல்லாமல் கவர்னர் அறிவித்துள்ள அறிவிப்பில் நீட் தேர்வுக்கு எதிராக ஒருபோதும் நான் கையெழுத்திட மாட்டேன் என்று தெரிவித்துள்ளதையும் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

தகுதி தேர்வு என்பது மாணவர்களின் அறிவு வளர்ச்சிக்கு பெரிதும் முக்கியமானது என்றும், அனைத்து உயர்கல்விகளும் தகுதி தேர்வு நடைமுறையில் தொடர வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளா.ர் மேலும் அவர் தெரிவிக்கையில். திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து நீட் தேர்வை ரத்து செய்வதே என்று தேர்தல் வாக்குறுதியில் கூறிவிட்டு இன்னமும் மக்களிடையே நாடகமாடுகிறார்கள். இதற்காக தமிழக முதல்வர் தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

தமிழகத்திலே ஆளும் கட்சியாகட்டும், எதிர்க்கட்சியாகட்டும் புதிய தமிழகம் கட்சியைத் தவிர அனைவரும் நீட் தேர்வை எதிர்த்தார்கள்.
ஆளுநர் மாளிகையில் மாணவர்களுடன் கலந்துரையாடும் போது ஒரு பெற்றோர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த ஆளுநர் நீட் தேர்வுக்கு எதிராக நான் ஒருபோதும் கையெழுத்திட மாட்டேன் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கப்பட்டால் மாணவர்களின் போட்டியிடும் திறன் குறைந்து போகும். பள்ளிகளில் நடத்தப்படும் பாடத்திலே நீட் தேர்வுக்கான அனைத்து தேவைகளுக்குமான பாடங்களை நடத்த வேண்டும் என்றார். இது வரவேற்கத்தக்கது என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here