மது போதை உள்ளிட்ட பல்வேறு போதை பழக்கங்களுக்கு அடிமையாகியுள்ள தமிழக இளைஞர்களை காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருப்பத்தூரில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில் .
திருப்பத்தூரில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாமக தலைவர் அன்புமணி ‘தமிழகத்தில் அதிக அளவு போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் இளைஞர்கள் சீரழிந்து வருகிறார்கள்.இது தமிழக காவல்துறைக்குத் தெரியாமல் நடக்க வாய்ப்பில்லை. கொரோனாவிற்க்கு பிறகு தமிழகத்தில் மது விற்பனை அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் போதைப் பொருட்களைத் தடுக்க ஏற்கனவே தனிப்பிரிவு இருப்பினும் இதனை தீவிரமாக கண்காணிக்க கூடுதல் போலீசாரை பணியமர்த்த வேண்டும் என்றும் இதனை கண்காணிக்க தனியாக ஒரு டிஜிபி நியமிக்கப்படவேண்டும் அப்படி பணியமர்த்தப்படும் காவல்துறை தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும்’ என்று கோரிக்கையை வலியுறுத்தினார் .
மேலும் அவர் பேசுகையில் பள்ளி , கல்லூரி மாணவர்கள் மற்றும் பெண்கள் அதிக போதைப் பொருட்களைப் பயன்படுத்தத் தொடங்கி விட்டார்கள்.
இந்தியாவிலேயே சாலை விபத்துக்கள் அதிகம் நடக்கும் அதிக விதவைகள் இருக்கக் கூடிய மாநிலமாகத் தமிழகம் உள்ளது.
இது மட்டுமின்றி இந்தியாவிலேயே அதிக மனநலம் பாதிக்கப்பட்டவர்களும் , அதிக தற்கொலை நடக்கும் மாநிலமாகவும் தமிழகம் உள்ளது.
இதற்குக் காரணம் மது மட்டும் தீய போதை பழக்கங்களுக்கு இளைஞர்கள் அடிமையாகி இருப்பதே முழுமுதல் காரணம் . தற்போது தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபான கடைகள் அதிகரித்தியிருப்பதும் இதற்கு கூடுதல் காரணம் .
அண்ணா, பெரியார் கொள்கையைப் பின்பற்றி நடப்பதாக திமுக பெயரளவிற்கே பிரச்சாரம் செய்து வருகிறது , அவர்களுடைய கொள்கையை ஏற்க மறுக்கிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு படிப்படியாக மதுக்கடைகளைக் குறைப்போம் என மேடைக்கு மேடைப்பேசிய திமுக , ஆட்சிக்கு வந்த பிறகு அவர்களுடைய வாக்குறுதியை மறந்துவிட்டனர் . ஒரு மதுபான கடையைக் கூட இன்னும் மூடவில்லை .
தமிழக முதல்வர் ஸ்டாலின் மது மற்றும் போதை பழக்கத்திலிருந்து தமிழக இளைஞர்களைக் காப்பாற்ற வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்துளார் .