சென்னை: ”ஆக்ரோஷமாக வந்தாலும் அமைதியாக வந்தாலும், இந்தி திணிப்பை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது, மொழியை திணிப்பதை பா.ஜ.கவும், மத்திய அரசும் நிறுத்திக் கொள்ள வேண்டும்” என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று அலுவல் மொழிக்கான 38 வது நாடாளுமன்ற குழுக்கூட்டம் டெல்லியில் நடந்தது. மத்திய மாநில அலுவல் மொழிகள் குறித்த 38-வது பாராளுமன்ற கூட்டத் தொடர் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது, பிரதமர் நரேந்திர மோடி இந்தி மற்றும் பிற அனைத்து இந்திய மொழிகளையும் உலக அரங்கில் பெருமைப் படுத்தி வருகிறார்.
உள்ளூர் மொழிகளுக்கு அனைவரும் மரியாதை கொடுக்கும்போது தான் அலுவல் மொழி ஏற்றுக்கொள்ளப்படும். அலுவல் மொழியின் வேகம் மெதுவாக இருந்தாலும் எந்தவித எதிர்ப்பும் இன்றி அதற்கு ஏற்புணர்வை வளர்க்க வேண்டும் எனப் பேசியிருந்தார். அந்தக் கூட்டத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை தாங்கினார். அந்த கூட்டத்தில் அமித் ஷா பங்கேற்று இந்தி மொழி குறித்து பேசினார். அப்போது “இந்தி மொழி என்பது உள்ளூர் மொழிகளுக்கு போட்டி இல்லை. இந்தி மொழியை அனைவரும் எதிர்ப்பு இன்றி ஏற்க வேண்டும்” என அமித்ஷா கூறினார்.
அமித்ஷாவின் இந்தப் பேச்சுக்கு பல்வேறு தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மத்திய பாஜக அரசு மீண்டும் இந்தியை திணிக்க முயற்சிப்பதாக அரசியல் தலைவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், அமித் ஷா பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.