தஞ்சை உலகப் பிரசித்தி பெற்ற சரஸ்வதி மஹால் நூலகம் – தமி …

The News Collect
2 Min Read
  • தஞ்சை உலகப் பிரசித்தி பெற்ற சரஸ்வதி மஹால் நூலகத்தில் தமிழக ஆளுநர் ஆர் .என்.ரவி பார்வையிட்டு வருகிறார்.

தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தை காண்பதற்காக இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலமாக திருச்சி வருகை தந்த தமிழக ஆளுநர் அங்கிருந்து சாலை மார்க்கமாக தஞ்சை சுற்றுலா மாலையில் வருகை புரிந்தார். பின்னர் அங்கிருந்து தஞ்சை அரண்மனை வளாகத்தில் இருக்கும் உலகப் பிரசித்தி பெற்ற சரஸ்வதி மஹால் நூலகத்தினை பார்வையிட்டு வருகிறார்.

- Advertisement -
Ad imageAd image

சரஸ்வதி மஹால் நூலகத்தில் ஒரு மணி நேரம் அங்கிருந்து ஓலைச்சுவடிகள் மியூசியம் மற்றும் தஞ்சை மாவட்ட உள்ள வரலாறு பற்றியும் பெரிய கோயில், சரஸ்வதி மஹால் பற்றியும் ஒலி ஒளி காட்சிகளை பார்த்துள்ளார். பின்னர் அங்கிருந்து சுற்றுலா மளிகை செல்லும் அவர் மாலை 4 மணி அளவில் தஞ்சை உலகப் பிரசித்தி பெற்ற பெருவுடையார் கோயிலில் பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொள்ள உள்ளார்.

தஞ்சை சரசுவதிமகால் நூலகம் என்பது இந்திய ஒன்றியம் தமிழ்நாட்டின், தஞ்சாவூரின், தஞ்சை அரண்மனை வளாகத்தில் அமைந்துள்ள ஒரு நூலகம் ஆகும். இது உலகில் உள்ள தொன்னூலகங்களில் ஒன்றாக சிறப்பாகக் கருதப்படுகின்றது.

தோற்றம் : சுமார் 617 ஆண்டுகளுக்கு முன்னர் (பொ.ஊ. 1400 களிலே) இருந்த சோழர்கள் காலத்தில் தோன்றி , அவர்கள் பணியால் வளர்ச்சி யடைந்து, பின்னர் தஞ்சை நாயக்க மன்னர்களால் வளர்க்கப்பட்டு அதன் பின்னர் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்களால் வளர்ச்சியுற்று, இன்று பன்மொழிச் சுவடிகளும், காகிதத்தில் எழுதிய நூல்களும், ஓவியங்களும் கொண்ட ஓர் ஒப்பரிய நூலகமாகத் திகழ்கின்றது.

கல்வெட்டில் கிடைத்துள்ள ஆதாரங்களின் படி (ARE 168, 169, 1961-62) இந்நூலகம் முதலில் சரசுவதி பண்டாரகம், புத்தகப்பண்டாரம் எனவும் இந்நூலகத்தில் பணி புரிந்தவர்கள் சரசுவதி பண்டாரிகள் எனவும் வழங்கப்பட்டனர். பொ.ஊ. 1122 முதலே இருந்ததற்கான அடிக்கோள்கள் உள்ளன.

நூல்கள் : இங்கு ஏறத்தாழ 25,000 சமற்கிருத நூல்கள், பதினொரு இந்திய மொழிகளில் உள்ளன. வரலாற்றுப் புகழ்வாய்ந்த கையெழுத்தாலான அஞ்சல் மடல்களும், அவற்றுடன் படங்களும், இருக்கின்றன.

400 ஆண்டுகளுக்கு முன்னிருந்த நந்திநாகரி என்னும் எழுத்தில் உள்ள சுவடிகள் உள்ளன. 300 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட சீவக சிந்தாமணி, திருவாசகம், திவாகரம், கலிங்கத்துப்பரணி, கம்பராமாயணம், திருக்குறள் முதலிய நூல்களும் உள்ளன.

பொ.ஊ. 1476 இல், காகிதச் சுவடிகளில் எழுதப்பட்டட சமற்கிருத நூலும் உள்ளது.
பொ.ஊ. 1703 இல், சுவடியில் எழுதப்பட்ட சீவக சிந்தாமணி உள்ளது. ஐரோப்பா, இந்தியா நாடுகளில் உள்ள அழகிய நகரங்களின் படங்கள்.

கொஞ்சம் இதையும் படிங்க : https://www.thenewscollect.com/thanjavur-all-india-lic-addressers-protest-in-front-of-head-post-office/

உடற்கூறு, தாவரம் முதலிய கலைக்களுக்குரிய பல நிறப்படங்களும், சிறந்த ஓவியங்களும் உள்ளன. மகாராட்டிர அரசர்கள் அலுவலகங்களில் பயன்படுத்திய ‘மோடி’ எழுத்துக்களாலான கையெழுத்துப் பிரதிகளும் உள்ளன.பிரெஞ்சு ஆசிரியர் ஒருவரால் எழுதப்பட்ட சாமுத்திரிகா என்ற அரியநூல் ஒன்றும் உள்ளது மிகவும் சிறப்பாகக் கருதப்படுகிறது.

Share This Article
Leave a review