சிவகாசி அருகே முன்விரோதம் காரணமாக வாலிபர் வெட்டி கொலை மேலும் ஒருவர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை

0
89
ஈஸ்வரபாண்டி

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ரிசர்வ்லைன் நேருஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி இவரது மகன் ஈஸ்வரபாண்டி (26) பேக்கேஜிங் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில்  இரவு தனது வீட்டு அருகில் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது கொண்டிருந்துள்ளார். அப்பொழுது அதே பகுதியைச் சேர்ந்த கோகுல்குமார் மற்றும் 4பேர் கொண்ட கும்பல் ஈஸ்வர பாண்டியின் கழுத்தில் அரிவாளால் வெட்டி உள்ளனர்.

இதில் பலத்த காயமடைந்த ஈஸ்வரபாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழுந்துள்ளார். தடுக்கச் சென்று அவரது நண்பர் சுந்தர் என்பவருக்கு கையில் அருவாள் வெட்டு காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் படுகாயம் அடைந்தவர் சிவகாசி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

மேலும் இச்ம்பவம் குறித்து சிவகாசி நகர் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து முக்கிய குற்றவாளியான கோகுல் என்பவரை பிடித்து விசாரணை செய்ததில் முன்பகை காரணமாக  கொலை நடந்துள்ளது என்பதுகாவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும்  தலைமறைவான குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here