சந்திராயன் 3 தொடர்பான செய்திக்கு விஞ்ஞானி நம்பினாராயணனை நேரில் சந்தித்து செய்தி எடுப்பதற்காக நெல்லையிலிருந்து செய்தியாளர் குழு ஒன்று நேற்று மாலை ஒரு காரில் புறப்பட்டு திருவனந்தபுரம் சென்றது.
செய்தியாளர் சந்திப்பு முடிந்ததும் அக்குழுவினர் அங்கிருந்து காரில் மீண்டும் நெல்லை நோக்கி திரும்பி வந்துள்ளனர்.
நள்ளிரவு ஒரு மணி அளவில் நாங்குநேரி தேசிய நெடுஞ்சாலை உள்ள தனியார் மில் அருகே கார் கட்டுப்பாட்டு இழந்து சாலை நடுவில் உள்ள தடுப்புச் சுவர் மீது மோதி கவிழ்ந்தது.
அதில் காரை ஓட்டி வந்த புதிய தலைமுறை தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் சங்கர்(32) தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் புதிய தலைமுறை செய்தியாளர் நாகராஜன்(45) மற்றொரு புதிய தலைமுறை ஒளிப்பதிவாளர் நாராயணன்(35) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.