1039 வது சதய விழா அரசு சார்பில் நேற்று கலைநிகழ்ச்சிகள் கோல …

The News Collect
3 Min Read
  • சூரியனார் கோவில் ஆதீனம் திருமணம் செய்தது குறித்து, அனைத்து ஆதீனங்களும் கூடி பேசப்படம் என தருமை ஆதீனம் தஞ்சையில் பேட்டி.

மாமன்னன் ராஜராஜ சோழனின் 1039 வது சதய விழா நேற்று கோலாகலமாக தொடங்கியது. முதல் நாள் ஆன நேற்று கவியரங்கம், பட்டிமன்றம், கருத்தரங்கம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

- Advertisement -
Ad imageAd image

இரண்டாம் நாளான இன்று காலை கோவில் நிர்வாகம் சார்பாக ஓதுவார்களுக்கு புத்தாடை வழங்கி மரியாதை செலுத்தப்பட்டது.

 

தொடர்ந்து பன்னிரு திருமுறைகளை யானை மீது வைத்து ஊர்வலமாக எடுத்து வந்து, மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத், தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி, மாநகராட்சி மேயர் ராமநாதன், தருமை ஆதீனம் 27வது குருமகா சந்நிதானம் கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் ஆகியோர் சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மேலும் பன்னிரு திருமுறை வீதி உலா நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த 27 ஆவது தருமை ஆதினம் கூறுகையில்,

ஆதீனம் திருமணம் செய்து கொள்வது அவருடைய விருப்பம், அது குறித்து நாங்கள் பேசிக் கொண்டிருக்கும்.

திருச்சியில் நாளை மறுநாள் குடமுழுக்கு நடைபெறுகிறது. அதற்கு எல்லா ஆதீனங்கள் வருகிறார்கள். அது குறித்து பேசப்படும் என தெரிவித்தார்.

இது ஒரு ஆன்மீக அரசு. அது மெய்ப்பிக்கும் வண்ணமாக, எந்தெந்த முகூர்த்த தேதிகள் இருக்கிறதோ, அந்த தேதிகள் தோறும் குடமுழுக்கு விழா நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இது ஒரு சாதனை தான். கிராம கோயில்களிலும் அரசாங்கம் தனிக் கவனம் செலுத்தி வருகிறது. கோவில் சொத்துக்களை மீட்டு தருவதிலும் இந்த அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அருண்மொழிவர்மன் அல்லது அருள்மொழிவர்மன் என்கின்ற பேரரசர் இராசகேசரி வர்மன் முதலாம் இராசராச சோழன் சோழ பேரரசின் புகழ் பெற்ற மன்னர்களுள் ஒருவனாவார். ‘சோழ மரபினரின் பொற்காலம்’ என்று போற்றத்தக்க வகையில் ஆட்சி செய்த இம்மன்னனின் ஆட்சிக்காலம் பொ.ஊ. 985 முதல் பொ.ஊ. 1014 வரையாகும். இவர் மகன் முதலாம் இராசேந்திரன் காலத்தில் சோழநாடு கடல் கடந்து பரவிய பெருமைக்கு அடிகோலியதும் இம்மன்னனே. இராசராச சோழனின் முப்பதாண்டு ஆட்சிக்காலமே சோழப் பேரரசின் வரலாற்றில் மிக முக்கியமாக விளங்கியது. ஆட்சி முறை, இராணுவம், நுண்கலை, கட்டிடக்கலை, சமயம், இலக்கியம் ஆகிய பல்வேறு துறைகளில் புதிய எழுச்சியைக் கண்ட சோழப்பேரரசின் கொள்கைகள் இவருடைய ஆட்சியில் உருப்பெற்றவையே.

கொஞ்சம் இதையும் படிங்க :https://www.thenewscollect.com/thanjavur-1039-students-participated-in-various-programs-on-the-occasion-of-1039th-sadaya-festival/

இவர் பொ.ஊ. 957 முதல் பொ.ஊ. 973 வரை சோழ நாட்டை ஆண்ட சுந்தர சோழனுடைய இரண்டாவது மகனாவார். சுந்தர சோழனுக்கும் சேர நாட்டு வானவன் மாதேவிக்கும் ஐப்பசி திங்கள் சதய நன்னாளில் பிறந்த இவரது இயற்பெயர் “அருண்மொழிவர்மன்”. இராசகேசரி அருண்மொழிவர்மன் என்ற பெயராலேயே தன் ஆட்சியின் தொடக்க காலத்தில் இம்மன்னர் அழைக்கப்பட்டார். இவர் ஆட்சியின் 3ம் ஆண்டு முதலே இராசராச சோழன் எனப்பட்டார் (988) தந்தை இறந்ததும் இவர் உடனடியாகப் பதவிக்கு வரவில்லை. 15 வருடகால உத்தம சோழனின் ஆட்சிக்குப் பின்னரே இவர் செத்திரிய முறைபடி ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இராசராசசோழன் தன்னை அரசர்களுக்கு எல்லாம் அரசன் (சத்திரிய சிகாமணி) என்று புனைபெயர் கொண்டு வாழ்ந்தார். விசயாலய சோழன் நிறுவிய சோழ அரசு இவர் காலத்திலும் இவர் மகன் இராசேந்திர சோழன் காலத்திலும் மிக உயர்நிலை எய்தியது. இராசராசனின் காலம் பிற்காலச் சோழர் வரலாற்றில் மட்டுமன்றித் தென்னிந்திய வரலாற்றிலேயே ஒரு பொற்காலமாகும்.

முதலாம் பராந்தக சோழன் இறந்ததற்கும் முதலாம் இராசராச சோழன் அரியணை ஏறுவதற்கும் இடையேயுள்ள காலப்பகுதி, முப்பது ஆண்டுகளைக் கொண்ட குறுகிய காலப்பகுதியாகும். ஆயினும் அது சோழ வரலாற்றின் மிகக் கடுமையான பகுதியாகும். அப்பகுதிக்கான ஆதாரங்கள், குழப்பமாகவே உள்ளன.

Share This Article
Leave a review