வேடசந்தூர் திமுக ஒன்றிய செயலாளர் வீரா சாமிநாதன் தோட்டத்து வீட்டில் துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்புடன் விடிய விடிய தொடர்ந்து நடந்த அமலாக்கத்துறை 18 மணி நேர சோதனை நிறைவு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றபட்டதாக தகவல்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் திமுக தெற்கு ஒன்றிய செயலாளராக இருப்பவர் வீரா சாமிநாதன். இவர் பழனி அருகே உள்ள புஷ்பத்தூரில் சி.பி.எஸ்.சி பள்ளி நடத்தி வருவதுடன் தமிழ்நாடு மற்றும் வெளி மாநிலங்களில் நிதி நிறுவனமும் நடத்தி வருகிறார். தொழிலதிபரான இவர் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருக்கமாக இருந்தாக கூறப்படுகிறது.
நேற்று மதியம் 2 மணி அளவில் இரண்டு கார்களில் வந்த பத்துக்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் இரண்டு குழுக்களாக பிரிந்து வேடசந்தூர் கொங்கு நகரில் உள்ள சாமிநாதனின் வீட்டிலும் வேடசந்தூரில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் தமுத்துபட்டியில் உள்ள அவரது தோட்டத்து வீட்டில் நேற்று காலை 11 மணியில் இருந்து திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
வீட்டில் வீராசாமிநாதன் அவர்களின் தாயார் சரஸ்வதி மட்டுமே இருந்தார்.
அவரிடம் செல்போனை வாங்கி வைத்துக் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் மாலை ஆறு முப்பது மணி வரை சோதனை செய்துவிட்டு அவரிடம் கையெழுத்து பெற்றுவிட்டு கிளம்பினார்.
கிளம்பி சென்ற சிறிது நேரத்திலேயே மீண்டும் தமுத்துப்பட்டியில் உள்ள தோட்டத்தை பங்காளவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் காரில் சென்று விசாரணை நடத்தினர். அதன்பிறகு வீட்டில் 30-க்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டனர்.
அவர்கள் வீட்டில் இருந்த திமுக கட்சி நிர்வாகிகளை அப்புறப்படுத்தி வாயில் கதவை சாத்தினர்.
அதனைத்தொடர்ந்து தொடர்ந்து தோட்டத்து பங்காளவில் இருந்த லாக்கர் சாவி இல்லாத காரணத்தால் நீண்ட நேரம் காத்திருந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் லாக்கர் சாவி எடுத்து வர சொன்னனர். அதன் பிறகு கோவையில் இருந்து வீராசாமிநாதனின் பணியாளர் சூர்யா காரில் கொண்டு வந்து அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.
லாக்கர் சாவியை கைப்பற்றிய அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து இரவில் விடிய விடிய சோதனை நடத்தி வந்தனர். 15 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் தோட்டத்து பங்களாவில் நேற்று காலை 11 மணியிலிருந்து இன்று அதிகாலை 5.30 மணி வரை கிட்டத்தட்ட 18மணி நேர சோதனை நிறைவு பெற்றது. சோதனை முடிவில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.சோதனையின் போது துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.