அமைச்சர் பொன்முடியிடம் நடைபெற்ற அமலாக்கத் துறை விசாரணை நிறைவு.

0
80
அமைச்சர் பொன்முடி ஸ்டாலின்

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியிடம் நடைபெற்ற அமலாக்கத்துறை விசாரணை நிறைவு பெற்றுள்ளது. அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற விசாரணை முடிந்து அமைச்சர் பொன்முடி வீட்டிற்கு புறப்பட்டார். அமைச்சர் பொன்முடியிடம் ஆம், இல்லை என்ற அடிப்படையில் 100 கேள்விகள் கேட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது வரை அமைச்சர் பொன்முடி தரப்பில் இருந்து ரூ 81.7 லட்சம் ரொக்கம், ரூ 13 லட்சம் வெளிநாட்டு கரன்சி, ரூ 41.9 கோடி டெபாசிட்…ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக  பொன்முடி வீட்டில் ரெய்டு பற்றி இ.டி அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.

கவுதம சிகாமணி பொன்முடி

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திங்கள்கிழமை (ஜூலை 17) சோதனை நடத்தினார்கள்.
இந்தச் சோதனையானது சைதாப்பேட்டை மற்றும் விழுப்புரத்தில் உள்ள அவரது வீடுகள் உள்பட 7 இடங்களில் நடந்தது.

இந்தச் சோதனையின் நிறைவில் பொன்முடி விசாரணைக்காக அமலாக்கத்துறை அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்டார். நள்ளிரவிலும் அவரிடம் விசாரணை நடந்தது.
தொடர்ந்து அதிகாலை 3 மணியளவில் அவர் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து அவர் சைதாப்பேட்டையில் உள்ள வீட்டுக்கு திரும்பினார்.

அமைச்சர் செந்தில் பாலாஜியை தொடர்ந்து தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனும் கள்ளக்குறிச்சி திமுக எம்.பியுமான கௌதம சிகாமணி ஆகியோருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் திடீரென சோதனை தொடங்கினர்.

நேற்று மீண்டும் அமலாக்கத்துறை விசாரணையை தொடர்ந்தது.பொன்முடியை ஒரு தளத்திலும், கௌதம சிகாமணியை வேறு தளத்திலும் வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். 6 மணி நேர இடைவிடாத விசாரணையை தொடர்ந்து இரவு 10 மணியளவில் விசாரணை முடிவுக்கு வந்தது. அதை தொடர்ந்து இருவரும் தங்கள் காரில் வீட்டுக்கு சென்றனர்.

பொன்முடி

இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சிகளின் இரண்டாவது ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள பெங்களூரு சென்றுள்ளார். இதற்காக புறப்படும் தருணத்தில் தான் ரெய்டு நடவடிக்கைகள் தொடங்கின.

அப்போதே, டெல்லியின் சதி. இதை உறுதியுடன் பொன்முடி எதிர்கொள்வார். வரும் மக்களவை தேர்தலில் மக்கள் நல்ல பாடம் கற்று தருவார்கள் என்றெல்லாம் கூறியிருந்தார். இந்நிலையில் ரெய்டு முடிந்து வீட்டிற்கு திரும்பியதும், அமைச்சர் பொன்முடியை பெங்களூருவில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலம் பேசியுள்ளார்.

அப்போது, அமலாக்கத்துறை விசாரணையை துணிச்சல் உடனும், சட்ட ரீதியாகவும் எதிர்கொள்ளுங்கள். பாஜக அரசின் பழிவாங்கல் நடவடிக்கைகளை எதிர்த்து நின்று முறியடிக்க தார்மீக ரீதியிலும், அரசியல் மற்றும் சட்ட ரீதியாகவும் திமுக துணை நிற்கும் என்று தெரிவித்துள்ளார்.அமலாக்கத்துறையின் விசாரணை மீண்டும் தொடருமா? என்ன நடக்கும் பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here