- கும்மிடிப்பூண்டி அருகே அரசுப் பேருந்து ஓட்டுநரின் வீட்டின் பூட்டை கள்ள சாவி போட்டு திருட்டு.
12 சவரன் நகைகள், ரூ. 95 ஆயிரம் ரொக்கப் பணம் மற்றும் 400 கிராம் வெள்ளி பொருட்களை திருடிய மர்ம நபர்களுக்கு கும்மிடிப்பூண்டி போலீசார் வலை.
கும்மிடிப்பூண்டி அடுத்த சேகணியம் கிராமத்தைச் சேர்ந்தவர் அரசு பேருந்து ஓட்டுநர் பிரகாஷ் (42).. இவர்கள் குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு __உள்ள இவர்களது உறவினர் வீட்டின் துக்க நிகழ்ச்சிக்கு கடந்த__அன்று சென்றுள்ளனர்.
வீடு பூட்டிய நிலையில் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்ம ஆசாமிகள் வீட்டின் பூட்டை கள்ள சாவி போட்டு திறந்து பீரோவில் இருந்த 12 சவரன் நகைகள், ரூ. 95 ஆயிரம் ரொக்கப் பணம் மற்றும் 400 கிராம் வெள்ளி பொருட்களையும் திருடி சென்றனர்.
துக்க நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில் நேற்று இரவு குடும்பத்தினருடன் ஓட்டுநர் பிரகாஷ் வீடு திரும்பிய போது வீட்டின் கதவு திறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். தொடர்ந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த இரும்பு பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து பொருட்கள் அனைத்தும் கீழே சிதறி கிடந்துள்ளது.
கொஞ்சம் இதையும் படிங்க : https://www.thenewscollect.com/problem-in-the-release-of-ganguwa-film-one-crore-and-sixty-lakh-rupees-should-be-paid-to-fuel-technologies-madras-high-court-order/
அங்கிருந்து படியே கும்மிடிப்பூண்டி போலீசாருக்கு பிரகாஷ் தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த கும்மிடிப்பூண்டி போலீசார் எச்சம்பம் குறித்து வழக்கு பதிவு செய்த நிலையில் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.