லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தும் பேஜர், வாக்கி டாக்கிகள் திடீரென வெடித்து சிதறிதில் 40 பேர் பலி.. வெளிப்படையாக ஒப்புக்கொண்ட இஸ்ரேல்!

0
63
  • லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தும் பேஜர், வாக்கி டாக்கிகள் திடீரென வெடித்து சிதறின. இதற்கு பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக ஹிஸ்புல்லா குற்றம் சாட்டிய நிலையில், தாக்குதல் நடத்த அனுமதி கொடுத்ததை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முதல் முறையாக ஒப்புக்கொண்டார்.

பாலஸ்தீனத்தின் காசா நகரை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மோதல் முற்றியது. இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி சுமார் 250 பேரை பிணைக்கைதிகளாக பிடித்து சென்றனர். இதனால், வெகுண்டெழுந்த இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினரை ஒழித்து கட்டுவோம் என சூளுரைத்து போர் தொடுத்தது.

காசாவிற்குள் தரை வழியாக தாக்குதல் நடத்தி ஹமாஸ் அமைப்பினரை கொன்று குவித்து வருகிறது. ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினரும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதால், ஹிஸ்புல்லா மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹிஸ்புல்லாவின் முக்கிய தளபதிகள் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில் ஹிஸ்புல்லா அமைப்பினரின் பல முக்கிய நிர்வாகிகள் பலியாகியுள்ளனர்.

ஹிஸ்புல்லாவிற்கு ஆதரவு அளிக்கும் ஈரானும் இஸ்ரேல் மீது ஏவுகணைகளி வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரானின் ராணுவ தளங்களை குறித்து கடந்த மாதம் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரால் மத்திய கிழக்கில் உச்ச கட்ட பதற்றம் நீடித்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர கத்தார் உள்ளிட்ட நாடுகள் மத்தியஸ்தம் செய்ய முயற்சித்து வருகின்றன.

முன்னதாக, கடந்த செப்டம்பர் மாதம் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில், லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தி வந்த பேஜர்கள் திடீரென வெடித்து சிதறின. இதில், ஹிஸ்புல்லா இயக்கத்தை சேர்ந்த 40 பேர் பலியாகினர். ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர். இந்த பேஜர் தாக்குதலுக்கு பிண்ணனியில் இஸ்ரேல் இருப்பதாக ஹிஸ்புல்லா குற்றம் சாட்டியது. தங்களின் தொலைத்தொடர்பு நெட்வொர்க்குகளுக்குள் புகுந்து இஸ்ரெல் தாக்குதல் நடத்தியிருப்பதாகவும், இதனால் பழிவாங்காமல் விட மாட்டோம் என ஹிஸ்புல்லா கூறியது. ஹிஸ்புல்லா முன்வைத்த குற்றச்சாட்டிற்கு இஸ்ரேல் பெரிதாக ரியாக்ட் செய்யாமல் இருந்தது.

இந்த நிலையில், தாக்குதல் நடத்தி இரண்டு மாதங்கள் ஆகியுள்ள நிலையில், பேஜர் தாக்குதலை நடத்தியது இஸ்ரேல் ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கேபினட் கூட்டத்தில், பெஞ்சமின் நெதன்யாகு இதை முதல் முறையாக ஒப்புக்கொண்டதாக சொல்லப்படுகிறது.

கொஞ்சம் இதையும் படிங்க :  https://www.thenewscollect.com/the-issue-of-registration-of-barren-land-without-any-documents-to-individuals-case-in-madras-high-court/

லெபனான் மீதான நடவடிக்கைக்கு நான் தான் ஒப்புதல் கொடுத்தகாக பெஞ்சமின் நெதன்யாகு கூறியிருக்கிறார். இந்த வாரம் தான், ஐக்கிய நாடுகள் அவையின் தொழிலாளர் முகமையில், மனிதகுலத்திற்கு எதிரான பயங்கரமான போர் நடைபெற்று இருப்பதாக இந்த விவகாரம் தொடர்பாக லெபனான் புகாரளித்தது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here