பிரிவினை அரசியலிலிருந்து விலகி நிற்கும் தவெக !.. கட்சியின் கொள்கைகள் கொள்கைகள் என்ன என்ன தெரியுமா ?

0
43
நடிகர் விஜய்
  • தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இம்மாநாட்டில் கட்சியின் கொள்கைகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இந்த கொள்கைகளை வைத்து பார்க்கும்போது விஜய் அடையாள அரசியலிலிருந்து விலகி நிற்கிறாரோ என்று தோன்றுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

உலகம் முழுவதும் பின்நவீனத்துவவாதிகளால் கட்டமைக்கப்பட்ட பல அரசியல் விஷயங்களில் அடையாள அரசியலும் ஒன்று. அடையாளம் என்பது ஒவ்வொருவருக்கும் வேறு வேறாக இருக்கும். நாம் எல்லோரும் தமிழர்களாக இருந்தாலும், பழங்குடியினர், தலித், பிற்படுப்பட்டவர், முன்னேறிய வகுப்பினர் என்கிற அடையாளம் இருக்கிறது. இது சமூக அடையாளம்.

இதுவே ஆண், பெண் என்று பிரிப்பது குடும்ப அடையாளம், இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர் என்றால் அது மத அடையாளம். இப்படி பல அடையாளங்கள் இருக்கின்றன. ஆனால் நாம் தமிழராக சொல்லிக்கொண்டாலும், பொது நோக்கம் என்கிற பிரச்னையை பேச இந்த அடையாள அரசியல் தடையாக இருக்கிறது. ஒரே உலகம், ஆனால் இருவேறு மக்கள் இருக்கிறார்கள். ஒரு தரப்பு செழிப்பாக இருக்கிறது, இன்னொரு தரப்பு ஏழையாக உணவுக்கு வழியில்லாமல் அன்றாடம் செத்துக்கொண்டிருக்கிறது. ஆக இதை பேச அடையாள அரசியல் தடையாக இருப்பதாக பொதுவுடமை பேசுபவர்கள் கூறியுள்ளனர்.

நாம் தமிழர், விடுதலை சிறுத்தைகள் கட்சி, பாமக, திமுக, அதிமுக என எல்லா அரசியல் கட்சிகளும் அடையாள அரசியலில்தான் பயணித்துக்கொண்டிருக்கின்றன என்பது பொதுவுடமைவாதிகளின் குற்றச்சாட்டு. இப்படி இருக்கையில் புதியதாக கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய்யின் அரசியல் கொள்கை என்ன என்பது குறித்து பெரும் கேள்வி எழுந்திருந்தது. இந்த கேள்விக்கு இன்று பதில் தெரிய வந்திருக்கிறது. தமிழக வெற்றிக்கழகத்தின் கொள்கைகள் இன்று வெளியாகியுள்ளன.

மதச்சார்பற்ற சமூக நீதியே நமது கொள்கை மதம், சாதி, பாலினம், பொருளாதாரம் என பிளவுப்படுத்தாமல் பிறப்பால் அனைவரும் சமமே எல்லா நிலைகளிலும் ஆண், பெண், மூன்றாம் பாலினத்தவர்.

 

கொஞ்சம் இதையும் படிங்க : https://www.thenewscollect.com/the-partys-policy-song-was-broadcast-on-stage-at-the-daweka-conference/

மாற்றுத்திறனாளிகள் சமம் மாநில தன்னாட்சி உரிமை என்பது அந்தந்த மாநிலங்களின் சுயாட்சி உரிமை தமிழ் மொழியில் படிப்பவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை இருமொழிக்கொள்கை வர்ணாசிரம கோட்பாடு எந்த வகையில் வந்தாலும் எதிர்ப்போம். ஆளுநருக்கு எதிர்ப்பு ஆகியவை கட்சியின் கொள்கையாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் மதம், சாதி, பாலினம், இனம், மொழி என்பதை பார்க்காமல் அனைவரையும் சமம் என்று கட்சி பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டிருப்பது ‘அடையாள அரசியலிலிருந்து’ விஜய் விலகி நிற்பதையே காட்டுவதாக பல்வேறு தரப்பினரும் கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here