திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் கொடநாடு கொலை வழக்கை உடனடியாக விசாரித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துவிட்டு இப்போது வரை மௌனம் காப்பது எதனால்.
கொடநாடு பகுதியில் மின்சாரத்தை தடை செய்ய வேண்டும் என்றால் கூட சாதாரண அரசு ஊழியரால் அது முடியாது. அதற்கு என்று சிறப்பு அனுமதி பெற்ற அரசு அதிகாரிகள் தான் மின்சாரத்தைக் கூட தடை செய்ய முடியும். இந்த நிலையில் அங்கு நடந்த கொள்ளை சம்பவத்திற்கு யார்? யார்? உடந்தையாக இருந்தார்கள். அப்போது இருந்த ஆட்சியாளர்கள் அதை முழு மனதோடு விசாரிக்காமல் விட்டது ஏன்? முக்கிய சாட்சிகள் கொலை செய்யப்பட்டது எதனால்? என்கிற கேள்வி எல்லோருக்கும் எழும் நிலையில் இன்னமும் அந்த வழக்கை திமுக அரசு விசாரிக்காதது ஏன்? உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் வரை எங்களுடைய போராட்டம் தொடரும்.
இன்று ஆர்பாட்டத்தோடு முடிவுற்ற இந்த போராட்டம் குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் வரை வெவ்வேறு வடிவங்களில் தொடரும். என அதிமுக மாவட்ட செயலாளர் செஞ்சி சேவல் ஏழுமலை கண்டன ஆர்ப்பாட்டத்தில் உரை நிகழ்த்தினார்.
விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சேவல் வெ.ஏழுமலை தலைமையில் கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் விசாரணை தீவிரப்படுத்தி உண்மை குற்றவாளியை நாட்டு மக்களுக்கு அடையாளம் காட்ட வேண்டி திமுக அரசை வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட கழக பொருளாளர் காமராஜர் பெருமாள் மாநிலம் மருத்துவ அணி இணை செயலாளர் யோகேஸ்வரன் மாவட்ட கழக துணை செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தெற்கு மாவட்ட கழக செயலாளர் முத்து தலைமையில் கொடநாடு கொலை கொள்ளை வழக்கை விரைந்து விசாரிக்க கோரி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில அமைப்பு செயலாளர் வானூர் கணபதி உள்ளிட்ட ஏராளமான ஒரு கலந்து கொண்டனர்.