அருவாள் மீது ஏறி நின்று அருள்வாக்கு சொன்ன சாமியாடிகள்., சிவகங்கையில் நடந்த அதிசயம்.!

0
101
வீடியோ கிராப்

டி மாதம் என்றாலே கோவிலையும் கோவிலுக்கு வழிபட வரும் பக்தர்களையும் கையில் பிடிக்க முடியாது. கரகம் எடுப்பது, அலகு குத்திக் கொள்வது, கூழ் ஊற்றுவது, தீ மிதிப்பது மற்றும் பல விரந்தங்கல் மேற்கொள்வது வழக்கம். அதுபோல தான் திருப்பதூரில் ஒரு கோவில் திருவிழாவில் ஒருவர் குறி சொல்லியிருக்கிறார். திருப்பத்தூர் புதுப்பட்டியில் அருவாள் மீது ஏறி நின்று அருள்வாக்கு சொன்ன சாமியாடிகள். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கோயிலில் குவிந்த பக்தர்கள்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் புதுப்பட்டியில் உள்ள அருள்மிகு மாவுடியூத்து காளியம்மன் கோயிலில் ஆடி சிறப்பு அன்னதான விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் இரண்டாவது வெள்ளி கிழமை இந்த திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோன்று இன்று 25 வது ஆண்டாக இவ்விழா கொண்டாடப்பட்டது. இந்த திருவிழாவை முன்னிட்டு கடந்த ஜூலை 20 ல் காப்புகட்டுதலுடன் விழா துவங்கியது. அன்றிலிருந்து விரதம் இருந்து வந்த பக்தர்கள் ஒவ்வொரு நாளும் இரவு கும்மி கொட்டி வழிபாடு நடத்தி வந்தனர்.

இரண்டாவது வெள்ளிக் கிழமையான இன்று நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம், முளைப்பாரி, பூத்தட்டு, தீச்சட்டிகளை சுமந்து முக்கிய வீதிகளின் வழியாக அருள்மிகு மாவூடியூத்து காளியம்மன் கோயில் வந்தடைந்தனர். முதலில் கரந்த மலையில் இருந்து கொண்டு வந்த புனித தீர்த்தத்தால் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பின்பு பக்தர்கள் கொண்டு வந்த பாலால் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்று சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கோயில் வந்தடைந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோயில் வாசலில் கும்மியாட்டம் ஆடி மகிழ்ந்தனர்.

அதனைத் தொடர்ந்து கரகத்தை சாமியாடிகள் தலையில் சுமந்து சென்று அருகில் உள்ள திருக்குளத்தில் அமிழ்த்தும் போது கூடியிருந்த பெண்கள் குலவையிட்டு வழிபட்டனர். இக்கோவிலின் சின்ன கருப்பர், வெள்ளாளங்கருப்பர் ஆகிய சாமியாடிகள் அரிவாள் மீது ஏறி நின்று அருள்வாக்கு சொல்வதை கேட்பதற்காக அருகில் உள்ள மதுரை, புதுக்கோட்டை, திருச்சி, ராமநாதபுரம் உள்ளிட்ட
பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கானோர் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வருகை தந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here