இவை எல்லாம் மார்பிங்., இது எல்லாம் பொய்யான போட்டோஸ்.! யாரை ஏமாற்றப் பார்க்கிறீர்கள்.!

0
104
செந்தில் பாலாஜி

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை விசாரணையின் போது முக்கியமான சில கேள்விகளுக்கு கோபமாக, மறுப்புடன் பதில் சொன்னதாக கூறப்படுகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது அமலாக்கத்துறை மூலம் விசாரிக்கப்பட்டு வருகிறார். கடந்த இரண்டு நாட்கள் விசாரணை முடிந்துவிட்டது. இன்னும் 3 நாள் விசாரணை மீதம் இருக்கிறது. இன்று 3வது நாள் விசாரணை தொடங்கி நடந்து வருகிறது. பெரும் போராட்டத்திற்கு பின் அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை கஸ்டடியில் எடுத்துள்ளது. முதலில் இவர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். அதன்பின் 8 நாட்கள் அமலாக்கத்துறை கஸ்டடி கொடுக்கப்பட்டது. ஆனால் அப்படி கஸ்டடி கொடுத்தும் கூட அமலாக்கத்துறை இவரை கஸ்டடி எடுக்காமல், உடல்நிலையை காரணம் காட்டி விசாரிக்காமல் விட்டது. அதன்பின் உச்சநீதி மன்றத்தில் போராடி அமலாக்கத்துறை 5 நாட்கள் கஸ்டடியை பெற்றுள்ளது.

விசாரணை தற்போது புதிய உச்சத்தை தொட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த முறை விசாரணையில் பல ஆவணங்களை காட்டி அதிகாரிகள் விசாரித்ததாக கூறப்படுகிறது. அதன்படி செந்தில் பாலாஜியிடம் இந்து சொத்துக்கள் எல்லாம் உங்களுடையதா என்று கேட்டுள்ளனர். சில ஆவணங்களை காட்டி செந்தில் பாலாஜியிடம் இதை கேட்டுள்ளனர். அதற்கு அவை என்னுடையது இல்லை என்று உள்ளார். உங்கள் தம்பியடையதா என்று கேட்டுள்ளனர். அதற்கும் என்னுடையது இல்லை என்று சொல்லி உள்ளார். அமலாக்கத்துறை: இதையடுத்து அதிகாரிகள், இவை உங்களுடையது இல்லை. ஆனால் உங்கள் உறவினர்களுடையது. அது உங்களுக்கு தெரியுமா என்றுள்ளனர்.

செந்தில் பாலாஜி: எனக்கு தெரியாது என்றுள்ளார்.

அமலாக்கத்துறை: இந்த சொத்துக்கள் எப்படி வாங்கப்பட்டது என்ற ஆதாரங்கள் இல்லையே. அதாவது உங்களுக்கு தெரியுமா என்றுள்ளனர்.

செந்தில் பாலாஜி: இல்லை, அதெல்லாம் எனக்கு தெரியாது என்றுள்ளார்.

அமலாக்கத்துறை: அப்படி என்றால் இந்த இந்த சொத்துக்கள் இருக்கும் இடத்திற்கு நீங்கள் செல்லவில்லை என்று சொல்கிறீர்களா என்று கேட்டுள்ளனர்.

செந்தில் பாலாஜி: ஆம், நான் சென்றதில்லை என்றுள்ளார்.

உடனே அமலாக்கத்துறை அதிகாரிகள் சில போட்டோக்களை எடுத்துக்காட்டி இதோ பாருங்கள். நீங்கள் சென்றதற்கான ஆதாரம் என்று காட்டி உள்ளனர். ஆனால் அமலாக்கத்துறை காட்டிய புகைப்படத்தை கூலாக மறுத்த செந்தில் பாலாஜி இவை எல்லாம் மார்பிங். இது எல்லாம் பொய்யான போட்டோஸ். யாரை ஏமாற்ற பார்க்கிறீர்கள். என்று கேட்டுள்ளார். அவரின் இந்த பதிலை அமலாக்கத்துறையினர் பதிவு செய்து கொண்டனர். நேற்று காலை 8.30 மணிக்கு செந்தில் பாலாஜி காலை உணவு சாப்பிட்டு உள்ளார்.
அதன்பின் 9 மணிக்கு தொடங்கி 12.30 மணி வரை செந்தில் பாலாஜி விசாரணை செய்யப்பட்டு உள்ளார்.

அதன்பின் மீண்டும் மதிய உணவு இடைவேளை கொடுக்கப்பட்டு உள்ளது. பின்னர் மாலை 4 மணி வரை விசாரணை செய்யப்பட்டு உள்ளார். அதை தொடர்ந்து மீண்டும் விசாரணை 8 மணி வரை நடந்து உள்ளது. இதையடுத்து இரவு உணவு செந்தில் பாலாஜிக்கு கொடுக்கப்பட்டு உள்ளது. பின்னர் லேசான சில கேள்விகள் மட்டும் கேட்டுவிட்டு, அவரை தூங்க அனுமதித்து உள்ளனர். அமலாக்கத்துறையின் விசாரணைக்கு நேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி முழுமையான ஒத்துழைப்பு வழங்கியதாகவே கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here