பூந்தமல்லி அருகே கத்தி முனையில் திருநங்கையை ஆட்டோவில் கடத்திய கும்பல்

0
98
மதுரவாயல் காவல் நிலையம்

பூந்தமல்லி அருகே கத்தி முனையில் திருநங்களையை ஆட்டோவில் கடத்தி சென்ற கும்பல்.கடத்தல் கும்பலை பிடிக்க சென்ற உதவி ஆய்வாளர் வயிற்றில் கடித்து விட்டு தப்பி ஓடிய கும்பல் கைது, திருநங்கை மீட்பு.

சென்னை பெரம்பூர் பிருந்தா தியேட்டர் பகுதியை சேர்ந்த திருநங்கைகள் ஜெனனி(23) மற்றும் ப்ளெசிகா(22).  இருவரும் நேற்று முன்தினம் இரவு பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை ஜீசஸ் கால்ஸ் அருகே நின்று கொண்டிருந்தனர்.அப்போது ஆட்டோவில் வந்த ஒரு கும்பல் கத்திமுனையில் திருநங்கை ப்ளெசிகாவை ஆட்டோவில் கடத்தி சென்றது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சக திருநங்கை ஜெனனி உடனே காவல் கட்டுபாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்து சென்ற மதுவராயல் காவல் உதவி ஆய்வாளர் மகாராஜன் தலைமையிலான போலீஸார் ஜெனனியிடம் விசாரணை நடத்தினர். பின்னர் கடத்தி செல்லப்பட்ட திருநங்கை பிளெசிகா செல்போன் எண்ணின் டவர் லொக்கேஷனை வைத்து கடத்தல் கும்பல் மதுரவாயல் செட்டியார் அகரம் பகுதியில் பதுங்கி இருப்பதை போலீஸார் கண்டு பிடித்தனர்.இதனையடுத்து தனிப்படை போலீஸார் சம்பவயிடத்திற்கு கடத்தல் கும்பலிடம் சிக்கிய திருநங்கையை பத்திரமாக மீட்டனர்.

மேலும் போலீஸார் கடத்தல் கும்பலை கைது செய்ய முயன்ற போது அதில் ஒருவர் உதவி ஆய்வாளர் மகாராஜன் வயிற்றை கடித்து விட்டு தப்பி ஓட முயன்றனர். உடனே போலீஸார் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததன் பேரில் போலீஸார் அங்கு சென்று கடத்தல் கும்பல் சுற்றி வளைத்து இருவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.விசாரணையில் பிடிப்பட்ட நபர்கள் ஆவடி காமராஜ் நகரை சேர்ந்த ஜெகன்(30) மற்றும் ராமாபுரத்தை சேர்ந்த தினேஷ்(26) என்பது தெரியவந்தது.

மேலும் மதுபோதையில் இருந்த இருவரும் கத்தியை காட்டி மிரட்டி திருநங்கை ப்ளெசிகாவை ஆட்டோவில் கடத்தி சென்று பின்னர் அவருக்கு மயக்க மாத்திரை கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றது தெரியவந்தது.இதனையடுத்து போலீஸார் இருவர் மீதும் கடத்தல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து அவர்களிடம் இருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய ஆட்டோ, கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here